இலங்கை மாணவர்களுக்கு நவீன கற்கை நெறிகள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மாணவர்களுக்கு நவீன கற்கை நெறிகள்

இலங்கை மாணவர்களுக்கு ஈடிணையற்ற பட்டப்பின் கற்கைநெறிக்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் இலங்கையின் முன்னணி தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான Horizon Campus, ஐக்கிய ராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளது.

இந்தப் பங்குடமையானது, சட்டம் மற்றும் தகவல் தொடர்பாடல் (IT) துறைகளைத் தேர்வுசெய்யும் மாணவர்களுக்கு தற்போதைய சந்தைப் போக்குகளுக்கேற்ப பாடநெறிகளைத் தெரிவுசெய்யும் வாய்ப்பினை வழங்குகின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய Horizon Campus இன் பிரதம நிறைவேற்றதிகாரியான அஜித வனசிங்க, “இரு பல்கலைக்கழகங்களுக்குமான நீண்டகால ஒத்துழைப்பினை இன்றைய தினம் சுட்டி நிற்கின்றது. இது இரு நிறுவனங்களுக்கும் எங்கள் நாட்டுக்கும் சாதகமான பலாபலன்களைத் தரும் என்று நான் திடமாக நம்புகின்றேன். பாரிய பொருளாதார அபிவிருத்திகள் இடம்பெறும் யுகமொன்றினுள் இலங்கை புகுந்துள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழங்களில் பொதுவாகவுள்ள கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக தற்போதைய உலக சந்தைப் போக்குக்கு ஏற்ப கற்கைநெறிகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் இலங்கைக்குத் தேவைப்படுகின்றன. எங்களது தேவையை நிறைவேற்ற எசெக்ஸ் பல்கலைக்ககழகம் முன்வந்துள்ளது. அது எங்கள் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமையும் கற்கைநெறிகளை வழங்கத் தயாராகவுள்ளது.”

2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Horizon Campus ஆனது சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டத்தை, ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெற உதவுகின்றது.

இப் பல்கலைக்கழகமானது, முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கல்வி மற்றும் சர்வதேச கற்கைநெறிகள் போன்ற கற்கைநெறிகளை அதன் 5 வளாகங்களினூடாக வழங்குகின்றது. இது குறித்துக் கருத்துக் கூறிய எசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அந்தனி பொஸ்டர், “Horizon Campus போன்றதொரு பெருமை மிகு அமைப்புடன் இலங்கையில் பங்குடமையைஏற்படுத்திக் கொண்டமை மகிழ்ச்சி தருகின்றது, நாங்கள் எவ்வாறு பங்குடமையை ஏற்படுத்துவது அடித்தளத்தில் இருந்து இந்தப் பங்குடமையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பன பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

மாணவர்களை உலகின் பிரஜைகளாக்கி உலகத்தினை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் எசெக்ஸ் பல்கலைக்கழக்தின் தொலைநோக்குச் சிந்தனை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தெளிவாக நிரூபணப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Comments