தனது பதவியை இராஜினாமா செய்தார் | தினகரன் வாரமஞ்சரி

தனது பதவியை இராஜினாமா செய்தார்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த டேவிட் பீவெர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனது பதவியை இராஜினா மா செய்தார்.

அவுஸ்திரேலியா அணி தென்ஆபிரிக்கா சென்று விளையாடும்போது கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட், டேவிட் வோர்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர். ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்தாலும், அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அவர்களுக்கு ஓராண்டு தடைவித்தது.

ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அதை நிராகரித்தது.

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது டேவிட் பீவெர் 2-வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments