சுப்பர் 8 தொழில்நுட்பம் கொண்ட ஸ்டார்லைட் ஹேர்பல் டிடர்ஜன்ட் பவுடர் | தினகரன் வாரமஞ்சரி

சுப்பர் 8 தொழில்நுட்பம் கொண்ட ஸ்டார்லைட் ஹேர்பல் டிடர்ஜன்ட் பவுடர்

இலங்கையின் ஃபெப்ரிக் பராமரிப்பு நிறுவனமான ஸ்டார் ஹோல்டிங்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட், புரட்சிகரமான சுப்பர் 8 தொழில்நுட்பத்திலமைந்த ஸ்டார்லைட் ஹேர்பல் டிடர்ஜன்ட் பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் சுலைமான் சிராஜ் கருத்துத் தெரிவிக்கையில், எமது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வதையும் தொடர்ந்து முன்னெடுப்போம். அந்த உறுதி மொழிக்கமைய நாம் தொடர்ந்து இயங்குவதுடன், வீடுகளுக்கு புரட்சிகரமான மற்றுமொரு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.

ஸ்டார்லைட் ஹேர்பல் டிடர்ஜன்ட் பவுடர் கண்கவர் பச்சை நிற பொதியில் அடங்கியுள்ளதுடன், வெளியே புலப்படக்கூடிய வகையில் இந்த பொதி காணப்படுவதால், உள்ளிருக்கும் பச்சை நிற சலவை பவுடரை வாடிக்கையாளர்கள் பார்வையிடக்கூடியதாக இருக்கும். இதனூடாக இலங்கையின் முதலாவது வர்ணம், பொதியிடல் மற்றும் சேர்மானம் ஆகியவற்றை ஒரேவிதமாக மேற்கொண்டுள்ள முதலாவது தயாரிப்பாகவும் அமைந்துள்ளது.

ஸ்டார் ஹோல்டிங்ஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஹஷான் ஹபுதந்திரி, “சந்தையில் முதல் அறிமுகம்” எனும் புத்தாக்கமான தயாரிப்பினூடாக சந்தையை ஆக்கிரமிக்கக்கூடிய எமது திறனை, நாம் எமது போட்டியாளர்களை பின்தொடராமல், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பின்தொடர்வதால் உறுதியாக கொண்டிருக்கக்கூடியதாக உள்ளது. புதிய தயாரிப்புகளினூடாக சந்தையை தொடர்ந்து ஆக்கிரமிப்பதுடன், நுகர்வோரின் உள்ளங்களில் நிலைத்திருந்து, அவர்கள் செல்லுமிடமெங்கும் ஸ்டார் தயாரிப்புகளை நாடச் செய்யும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

இந்த அறிமுக நிகழ்வில் சிறப்பு உரையை ஆற்றுவதற்காக முன்னணி சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார மூலோபாய சிந்தனையாளரான நந்தன ஏ. விக்ரமகே மற்றும் TVS லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களும் ஸ்டார்லைட் தற்போது அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். புகழ்பெற்ற மூலப்பொருள் விநியோகத்தரான த நீராஜ் குப்தாவும் இதே விதமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

Comments