எயார் ஏசியாவின் கொழும்பு- பாங்கொக் நேரடி விமான சேவை | தினகரன் வாரமஞ்சரி

எயார் ஏசியாவின் கொழும்பு- பாங்கொக் நேரடி விமான சேவை

இலங்கையின் கொழும்பிலிருந்து தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதன் மூலமாக தெற்காசியாவில் மற்றுமொரு நாட்டிற்கும் எயார் ஏசியா தனது சேவைகளை விஸ்தரித்துள்ளது.

வாராந்தம் 4 தடவைகள் இவ்விமானசேவை இடம்பெறவுள்ளதுடன், 2018 டிசம்பர் 14 ஆம் திகதி முதல் தொழிற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. கண்கவரும் தாய்லாந்தின் அழகினை அனுபவிப்பதற்காக விசேட ஊக்குவிப்பாக அனைத்தும் உள்ளடங்கியவாறு ரூபா 13,999* என்ற ஆரம்ப கட்டணத்தில் டிக்கட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Thai AirAsia (விமான சேவைக் குறியீடு FD) வினால் இயக்கப்படும் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கான இந்த நேரடி விமான சேவையானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இவ்விமான சேவைக் குழுமத்தின் இரண்டாவது இணைப்புச் சேவையாக அமைந்துள்ளதுடன், மலேசியாவின் கோலாலம்பூர் மாநகருக்கான நேரடி விமான சேவையும் ஏற்கனவே அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AirAsia BIG நம்பிக்கைத் திட்ட அங்கத்தவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகக் கிடைக்கின்ற வகையில், அனைத்தும் உள்ளடங்கிய ஊக்குவிப்பு சலுகைக் கட்டணம் ரூபா 13,999* என்ற குறைந்த கட்டணத்திலிருந்து கிடைக்கப்பெறவுள்ளதுடன், அவர்கள் 2018 ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை www.airasia.com* என்ற விலை முதல் கிடைக்கின்ற ஊக்குவிப்பு கட்டணத்தைப் பெற்று தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Thai AirAsia டிசம்பர் 14 ஆம் திகதி முதல் 2019 மார்ச் 29 ஆம் திகதி வரையான காலத்தில் தமது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும்.

எயார் ஏசியா நம்பிக்கை அங்கத்தவர்கள் அல்லாதவர்களும் ரூபா 14,199* என்ற விலை முதல் கிடைக்கின்ற ஊக்குவிப்பு கட்டணத்தைப் பெற்று தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Thai AirAsia விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சந்திசுக் குளோங்சைய்யா கூறுகையில், “கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலமாக கோலாலம்பூர் ஊடாக விசாலமான நாடுகளுடன் இலங்கையுடனான இணைப்பு சேவையை வழங்கி வந்துள்ள எயார் ஏசியா விமான சேவையைப் பொறுத்தவரையில் இலங்கை எப்போதும் வளர்ச்சி வாய்ப்புக் கொண்ட ஒன்றாக காணப்படுகின்றது.

Comments