அரசுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு | தினகரன் வாரமஞ்சரி

அரசுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித்தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் 2ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்த பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுக்கு தமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பதுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு "நடுநிலை" வகிக்காது என்றும் அறிவித்துள்ளது.

Comments