ITC HOTELS அறிமுகப்படுத்தும் SAPPHIRE RESIDENCES | தினகரன் வாரமஞ்சரி

ITC HOTELS அறிமுகப்படுத்தும் SAPPHIRE RESIDENCES

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்ட வைபவத்தில் ஆடம்பர குடியிருப்பான SPPHIRE RESIDENCES பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டிய வைபவம் எதிர்வரும் 18 ஆம் திகதி, பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த புகழ்பெற்ற வடிவமைப்பாரான பிலிப் ஸ்டார்க் இன் கொழும்புக்கான வருகையுடன் நிறைவுபெறுகிறது. இவர் லண்டனைச் சேர்ந்த yoo inspired by starck உடன் இணைந்து SAPPHIRE RESIDENCES இன் உள்ளக வடிவமைப்பினை வழங்கவுள்ளார்.

காந்தியின் ஜனன தினத்தைக் கொண்டாடுவதற்காக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் ஆதரவுடன் தன்னிகரற்ற இசைக் கொண்டாட்டமான லக்ஷ்மி நாராயண குளோபல் மியூசிக் பெஸ்டிவல் நிகழ்வும் கடந்த 2 ஆம் திகதி கொழும்பு, நெலும் பொகுன ராஜபக்‌ஷ தியேட்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உலக புகழ்பெற்ற வயலின் வாத்தியக் கலைஞர் டாக்டர் எல். சுப்ரமணியம், லாத்வியாவின் Liepajas சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்ட மாபெரும் இசை நிகழ்வு நடைபெற்றது.

இவ்விசைக் கொண்டாட்டம் 'Sapphire Residences' by 'ITC Hotels' இனால் வழங்கப்படவுள்ள பிரத்தியேகமான வாழ்க்ைக முறையை வெளிப்படுத்துகிறது. கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள Sapphire Residences இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமையவுள்ள ஓர் செங்குத்துக் குடியிருப்பாகும்.

Comments