இந்திய அரசின் நிதி உதவியுடன் 50 மேலதிக மாதிரி கிராமங்கள் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய அரசின் நிதி உதவியுடன் 50 மேலதிக மாதிரி கிராமங்கள்

இந்திய நன்கொடை உதவியான 600 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியை உபயோகித்து, 50 மாதிரிக் கிராமங்கள் மூலமாக 1200 வீடுகளை நிர்மாணிக்க இந்தியாவும் இலங்கையும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளன.

இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் பேர்ணாட் வசந்த ஆகியோருக்கிடையில், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஹம்பாந்தோட்டையில் கிராம சக்தி மாதிரிக் கிராம வீடமைப்பு செயல் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட ‘சத்சுருகம’ மாதிரிக் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் வைபவத்தில் விசேட அதிதியாக இந்திய உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் 600 வீடுகள் கட்டப்படும். இச் செயல்திட்டம் காணிகள் மற்றும்

Comments