CINEC கல்வியகத்தின் ‘திறந்த நாள்’ | தினகரன் வாரமஞ்சரி

CINEC கல்வியகத்தின் ‘திறந்த நாள்’

சினெக் கெம்பஸ் (CINEC Campus) கல்வியகம் 2018 உயர்தர மாணவர்களுக்காகவும் அவர்களது பெற்றோருக்காகவும் நேற்று தனது கதவுகளை திறந்தது. இதன்மூலம், அவர்கள் எதிர்காலத்தில் வெற்றிகரமான ஒரு தொழில்வாழ்க்கையில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு கிடைக்கக் கூடிய சாத்தியமுள்ள கல்விசார் வழிகளை கண்டறிவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

திறந்த நாளில் (Open Day) இங்கு வருகைதந்த உள்ளார்ந்த ஆற்றலுள்ள மாணவர்கள் அன்றைய தினம் மேற்கொண்ட பதிவுகளுக்காக வழங்கப்படும் அற்புதமான விலைக் கழிவுகளின் மூலம் தம்முடைய கல்விசார் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறையை சிறப்பான முறையில் ஆரம்பித்து வைத்தனர். இதற்காக வழங்கப்படும் வெகுமதிகளுள் - உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பான முறையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான 75% வரையான விலைக்கழிவுகள் மற்றும் கட்டுப்படியான கல்விசார் நிதி வசதியைப் பெறுவதற்கான ஒத்துழைப்பு போன்ற சேவைகளும் உள்ளடங்குகின்றன.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்வியகம் நேற்று முற்பகல் 9 மணிக்கு திறக்கப்பட்டது. அதேவேளையில், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அங்கு காணப்படுகின்ற மிக முன்னேற்றகரமான வசதிகள் அன்றைய தினம் வருகைதரும் பார்வையாளர்களுக்கு முதற்தரமான அனுபவத்தை வழங்கியது.

இங்கு வருகைதந்த பார்வையாளர்கள் வளாகத்தில் உள்ள கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்கள், தமக்கு விருப்பமான கல்விசார் துறையில் காணப்படுகின்ற தொழில்வாய்ப்புக்கள், சம்பந்தப்பட்ட துறைகளில் சிறந்து விளங்கும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற முன்னணி கல்வியகங்களுடன் சினெக் கெம்பஸ் கொண்டுள்ள கூட்டிணைவு போன்ற மேலதிக விபரங்களை, இங்கிருக்கும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

Comments