இந்தியா, இலங்கையில் பெண்களின் பங்களிப்பு சமூக, அரசியல் மட்டத்தில் இடம்பிடிப்பு | தினகரன் வாரமஞ்சரி

இந்தியா, இலங்கையில் பெண்களின் பங்களிப்பு சமூக, அரசியல் மட்டத்தில் இடம்பிடிப்பு

இந்தியா மற்றும் இலங்கையில் பெண்களின் பங்களிப்பானது அரசியல் மற்றும் சமூகத்தில் பாரிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசின் கூட்டுறவுடன் இந்திய சேவா நிறுவனத்தினால் பல்வேறு பெண்கள் சார் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுவதிகளுக்கான தொழில் ஊக்குவிப்பு மையத்தின் சுயதொழில் பெண்கள் அபிவிருத்தி அமைப்பினரின் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கல்லடியிலுள்ள மாவட்ட சிறு கைத்தொழில் திணைக்களத்தில் நடைபெற்றது.

சேவாவின் அமைப்பின் மட்டக்களப்புக்கான தலைவி ஏ. ரஜனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட அங்கத்தினர்கள் கலந்துகொண்டு இந்திய அரசின் உதவியினால் தங்களது தொழில்சார் முன்னேற்றம் மற்றும் தங்களது குறைபாடுகள் பற்றித் தெரிவித்தனர்.

சேவாவின் அமைப்பு ஒன்றை திருகோணமலையில் நிறுவுவதற்காக ஒரு யுவதின் வேண்டுகோளிற்கு இணங்க உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டு அதை அமைப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதி எல். ரமேஷ்பாபு, சேவாவின் இலங்கைக்கான திட்டப் பணிப்பாளர் மெகா தேசாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments