சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம் | தினகரன் வாரமஞ்சரி

சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம்

சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நீங்காத நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சத்துருக்கொண்டான்

நினைவுத்தூபி சந்தி முன்பாக இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 செப்டம்பர் மாதம் 9 திகதியன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 184 தமிழ் மக்களை ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட நாளாகும்.

இது தொடர்பாக அரசாங்கம் இரு விசாரணைக் குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டது.

எனினும், எவரும் இதுவரையும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும், அவரது 3 மாதக்குழந்தையும் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு 5 கைக்குழந்தைகள், பத்து வயதுக்கும் குறைவான 42 சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது படுகொலைசெய்யப்பட்டனர்.

இப்போது 28 வருடங்கள் கடந்தும் இந்தப் படுகொலைக்கு இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

உயிர்நீத்த உறவுகளை உளமாற நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரியநேந்திரன் தெரிவித்தார்.

Comments