விஷாலை மிரள வைத்த அமலாபால் | தினகரன் வாரமஞ்சரி

விஷாலை மிரள வைத்த அமலாபால்

‘அதோ அந்த பறவை போல’ படத்தை தொடர்ந்து அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் போஸ்டரை பார்த்து விஷால் மிரண்டிருக்கிறார்.

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை போல’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இப்படம் இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார் அமலாபால்.

'ஆடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘மேயாதமான்’ புகழ் ரத்னகுமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ராணாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் வெளியிட்டார்கள். வித்தியாசமான தோற்றத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Comments