காதலன் பற்றியெல்லாம்யோசிக்க நேரமில்லை | தினகரன் வாரமஞ்சரி

காதலன் பற்றியெல்லாம்யோசிக்க நேரமில்லை

நடிகை நிவேதா பெத்துராஜ் தனக்கு இன்னும் காதலன் அமையவில்லை என்றும் அதற்கு இப்போது நேரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நடிகை நிவேதா பெத்துராஜ் வில்லேஜ் வேடமாக இருந்தாலும் சரி நவீன வேடமாக இருந்தாலும் சரியாக பொருந்துகிறார். அண்மையில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த 'டிக் டிக் டிக்' படம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிக சந்தோசத்தில் உள்ளார் அவர். தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி, வெங்கட்பிரபுவின் பார்ட்டி, விஜய் ஆண்டனியின் திமிர் பிடிச்சவன், பிரபுதேவாவுடன் ஒரு படம் என ஏராளமான படங்களில் படுபிசியாக உள்ளார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் காதலன் அமையவில்லையா எனக் கேட்டதற்கு இல்லையே, இன்னும் அமையவில்லையே எனத் தெரிவித்துள்ளார். மேலும் காதலன் பற்றியெல்லாம் யோசிக்கக் கூட இப்ப நேரம் இல்லை. எண்ணமும் இல்லை என்றார்.

 

Comments