எந்தன் கந்தன் | தினகரன் வாரமஞ்சரி

எந்தன் கந்தன்

கல் என்றாலும்

கந்தா உனக்கு

கண் உண்டு

கற்சிலையே ஆனாலும்

கதிர் வேலா

உன்னில் கருணையுண்டு

கண்கள் இரண்டும்

திரண்டு காணும்

காட்சியென்றும் ஒன்றாகும்

அதற்கு சாட்சி

கந்தா உந்தன்

வேலாகும்

விண்ணும் மண்ணும்

எண்ணும் எழுத்தும்

நீ தந்தது

அழகும் நீயும்

ஒன்றென்பதாலே

அவணி என்ற

பேர் வந்தது

போதனை செய்தாய்

நல்லூரனாய்

சோதனை தீர்த்தாய்

செந்தூரனாய்

சாதனைப் படைத்தாய்

கதிர் வேலவனாய்

ஊரும் பேரும்

வேறானாலும்

ஓமெனும் நாமத்தின்

உள்ளுக்குள் இருந்து

உள்ளங்களை காப்பதில்

எந்தன் கந்தன்

நீ ஒருவனே

என்றானாய்

Comments