ரெதி ஸ்டோரின் ' ஏழாவது கிளை வெல்லம்பிட்டியில் | தினகரன் வாரமஞ்சரி

ரெதி ஸ்டோரின் ' ஏழாவது கிளை வெல்லம்பிட்டியில்

சீனாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பல வர்ண ஆடை வகைகளை மலிவு விலையில் சந்தைப்படுத்திவரும் 'ரெதி ஸ்டோர்' வணிக நிறுவனம் இலங்கையின் பல பகுதிகளிலும் தனது வர்த்தக நிலையங்களை திறந்து சங்கிலித்தொடரடிப்படையில் மிகவும் மலிவான விலையில் பல வர்ண ஆடை வகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறது. உங்கள் 'பணத்துக்கு அதிபெறுமதி' (value for money) எனும் குறிக்கோளையும் 'இலங்கையில் ஆடைவிற்பனைக்கான ஆகப் பெரிய சங்கிலித் தொடராகல்' எனும் தொலைநோக்கையும் அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் முதன்மை அடிப்படையில் நாடு பூராகவும் தனது கிளைகளை ஸ்தா பித்து தொழிற்பட்டு வருகிறது.

மேற்படி ஸ்தாபனம் நாட்டின் பிரதான நகரங்களில் தனது கிளைகளை ஸ்தாபித்துள்ளது. முதலில் தர்ஹா நகரில் கால் பதித்த 'ரெதி ஸ்டோர்' பாணந்துறை,கம்பளை, அம்பலாங்கொடை, திக்குவெல்லை, இரத்மலானையுடன் தனது ஏழாவது நிறுவனத்தை அண்மையில் வெல்லம்பிட்டியில் திறந்து வைத்துள்ளது.

இத் திறப்பு விழாவைத் தொடர்ந்து 'ரெதி ஸ்டோர்' நிறுவனம் பற்றி கருத்துத் தெரிவித்த பிரதம அதிதி, பன்னெடும் காலமாக பலவித வர்ணங்களில் துணிமணிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவரும் சீனாவின் 'சீனா உலகத்தை உடுப்பாட்டும்' (clothing world) எனும் கோட்பாட்டை இந்நிறுவனம் பேணிவருவதுடன் உலகின் அதிஉயர் குடித்தொகையைக் கொண்டசீன மக்களின் வாழ்வாதாரத்தை தூக்கிவைக்கும் விதமாய் குறைந்தவிலையில் ஜவுளி வகைகளை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றமை பாராட்டத்தக்கது என்றார். நிறுவனத்தின் தலைவர் முஸ்தபா அலவி, முகாமைத்துவ இயக்குநர் சஹாம் ஸல்மான், சிமாக் கலீல் உட்படமேலும் பல பிரமுகர்கள் திறப்புவிழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Comments