இலங்கையின் பல்லுயிரினங்களையும் பாதுகாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்குடமை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் பல்லுயிரினங்களையும் பாதுகாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்குடமை

தேசத்திலுள்ள மிகவும் புத்தாக்கமான தேசிய வங்கிகளுள் ஒன்றான சம்பத் வங்கி, அண்மையில் Biodiversity Sri Lanka (BSL) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ஒபாதா ஹல்கஹாவல என்ற இடத்தில் சீரழிந்து போயுள்ள பன்னம்செடி நிலத்தை மறுசீரமைத்தல் மற்றும் இலங்கையில் பல்லுயிரின கடன் முறைமை ஒன்றை அபிவிருத்தி செய்தல் ஆகியன தொடர்பில் அரச மற்றும் தனியார் துறையிலுள்ள ஏனைய பங்காளர்களுடன் இணைந்து ஒவ்வொரு நிறுவனமும் செயற்படுவதற்கு இடமளிக்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது வழக்கமான பாதுகாப்பு முன்னெடுப்புக்கள் தொடர்பில் கணிசமான மாற்றத்திற்கு வித்திடும். Biodiversity Sri Lanka இன் பணிப்பாளர் சபைத் தலைவரான டில்ஹான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் வங்கியின் குழும மனிதவள தலைமை அதிகாரியான அருண ஜெயசேகர ஆகியோரால் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சம்பத் வங்கி சூழல் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாடு மற்றும் தேசத்தில்பசுமையான எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும் அதன் உழைப்பு ஆகியவற்றை சமீபத்தைய இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மீண்டும் காண்பிக்கின்றது. இந்த ஐந்து ஆண்டு கால ஏற்பாட்டின் கீழ் கண்ணெலிய பாதுகாப்பு வனத்தில் BSL இனது முன்னோடி செயற்திட்டத்திற்கு வங்கி நிதியுதவி அளிப்பதற்கு இடமளிப்பதுடன், சூழலியல் மற்றும் உயிரியல் குறிகாட்டிகளின் அடிப்படையில் அதன் வளர்ச்சியை கண்காணிக்கும் பங்காளர்களாக நெருக்கமாக இணைந்து பணியாற்றவும் முடியும்.

ஒபாதா, ஹல்கஹாவல என்ற இடத்தில் சீரழிந்து காணப்படுகின்ற 10 ஹெக்டேயர் அளவு வனப் பிரதேசத்தை சீரமைப்பதற்கான முகாமைத்துவத் திட்டம் மற்றும் பல்லுயிரின அடிப்படையை உற்பத்தி செய்வதே இச்செயற்திட்டத்தின் முதற்கட்டமாகும்.

Comments