British Cosmetics பட்டமளிப்பு விழா | தினகரன் வாரமஞ்சரி

British Cosmetics பட்டமளிப்பு விழா

இலங்கையில் முதன்நிலை சிகையலங்காரம் மற்றும் அழகுசாதன உற்பத்தி, சேவை வழங்குனராக திகழும் பிரிட்டிஷ் கொஸ்மெடிக்ஸ் (British Cosmetics) நிறுவனம் தனது வருடாந்த மாணவர் பட்டமளிப்பு விழாவை அண்மையில் ஹில்டன் ரெஸிடன்சீஸ் ஹோட்டலில் மிகவும் கோலாகலமாக நடாத்தியது. இதன்போது தனது மாணவர்களுக்கு பட்டமளித்து கெளரவித்ததோடு, இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் சேவா வனித்தா பிரிவின் தலைவியான சந்திரிகா சேனாநாயக்க கலந்து சிறப்பித்ததோடு மேலும் பல விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

நகம்சார் கலை தொழில்நுட்பம், ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் போன்ற மூன்று துறைகளில் மாணவா்கள் கொண்டுள்ள அறிவை பரீட்சித்துப் பார்க்கும் போட்டிகளை உள்ளடக்கியதாகவே இந்த பெருமைமிகு விருது வழங்கும் விழா இடம்பெற்றது. இந்தப் போட்டிகளில் மாணவர்கள் சுறுசுறுப்பான முறையில் பங்குபற்றியதுடன், முன்மாதிரியான தங்களது திறமைகள் மற்றும் தாம் பின்பற்றுகின்ற உயர் தரநியமங்களையும் வெளிப்படுத்தினார்கள்.

இந்த போட்டிகளை கெரேன் வைட், கிஷோர் கோமஸ், சங்கீதா வீரரத்ன மற்றும் ரம்சி ரஹ்மான் போன்ற துறைசார் நிபுணர்கள் மற்றும் பிரபலங்களை உள்ளடக்கிய நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தப் போட்டிகளில் நகம்சார் தொழில்நுட்பவியலாளர் பிரிவின் வெற்றியாளராக நதீஜா சஞ்ஜீவனி அதாவுத தெரிவு செய்யப்பட்டார்.

Comments