கொழும்பு ஹில்டனில் கால்பந்து போட்டியை 24 அடி அகன்ற திரையில் ரசிகர்கள் பார்வையிடும் வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு ஹில்டனில் கால்பந்து போட்டியை 24 அடி அகன்ற திரையில் ரசிகர்கள் பார்வையிடும் வாய்ப்பு

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பல தசாப்தங்களாக தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்து வருகின்றது. அவ்வொளிபரப்பினால் எமது கால்பந்தாடட் ரசிகர்களும் அதைப் பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் உதைபந்தாட்டப் போட்டிகளை திறந்தவெளியில் ஒரு அகன்ற திரையில் கண்டுபளிப்பது இங்கு பிரபல்ய நிகழ்வல்ல. ஆனால் இவ்வாறான பெரிய திரையில் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே கண்டு மகிழந்துள்ளனர்.

ஆனால் 24 அடி அகன்ற திரையில் கால்பந்தாட்ட போட்டிகளை ரசிப்பதற்ககு இம்முறை எமது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் 21வது உலகக் கிண்ணப் போட்டியை ரசிப்பதற்கென்றே திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கால்பந்து சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுடனுமான சிறிய கால்பந்தாட்ட கிராமத்திருந்து போட்டியை ரசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்குத் தேவையான சிற்றுண்டிச்சாலைகள் போன்ற அனைத்தும் இக்கால்பந்தாட்டக் கிராமத்துகக்குள்ளேயே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இக்கால்பந்தாட்டக் கிராமம் கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டல் நீச்சல் தடாக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்பந்தாட்ட கிராமத்தின் நுழைவுப்பாதையில் இருபக்கங்களிலும் உலக கிண்ணப் கால்பந்தாட்டத் தொடரில் விளையாடும் பிரபல வீரர்களின் படங்களும், முன்னாள் பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான்களின் பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்நுழைவாயிலை ரஷ்யாவின் கட்டடக்கலையை ஞாபகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது. வலதுபக்கத்தில் அவ்வப்போது தயாரித்து வழங்கப்படும் சிற்றுண்டிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிர்மாணப் பணிகள் பற்றி அதை நிர்மானித்த கபில மொஹொட்டி கூறும் போது:

“தென்னாபிரிக்காவில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் போதுதான் இதுபோன்ற கால்பந்தாட்டக் கிராமத்தை முதன் முதலாக அமைத்தோம். அதன் பின் 2014ம் ஆண்டும் இதோ போல் நிர்மாணித்தோம். இப்போது அநேக இடங்களில் இதுபோன்று கால்பந்தாட்ட ரசிகர்களைக் கவரும் விதத்தில் காண்பிக்கிறார்கள். ஆனால் நாங்கள்தான் இதை முதன் முதலில் அறிமுகம் செய்தோம்.

“நாங்கள் இதை ஆரம்பித்தது எமது ஹோட்டலில் தங்கியிருக்கும் உல்லாச பிரயாணிகளை இலக்காக்கொண்டே ஆரம்பித்தோம். இவர்களும் இதற்கு விரும்பி வந்து தங்கள் இஷ்டம் போல் போட்டிகளை ரசிக்கிறார்கள். மேலும் இவ்விடத்துக்கு தொடர்ந்து வரும் ரசிகர்களும் உள்ளனர். தொடர்ந்து வரும் அந்த ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கிலேயே இம்முறை சற்று புதுமையாக சிறு கிராமம் போல் இதை உருவாக்கியுள்ளோம்.

“உணவு, மற்றும் பான வகைகள் பெற்றுக்கொள்வதற்கு நாம் சிறு சிற்றுண்டிச்சாலைகளை அமைத்துள்ளோம். அவைகளில் தேவையான உணவு மற்றும் பானங்கள் உள்ளன. அவை ஹோட்டல் விலையை விட மலிவாக இங்கு கிடைக்கும். ஹில்டன் என்ற பெயரைக் கேட்டவுடன் வாடிக்கையாளர்கள் அதிக விலை என்று நினைப்பார்கள். ஆனால் 400, 500, 600 ரூபாவுக்கு நிறைவான உணவு இங்கு கிடைக்கும். இது மிகவும் அமைதியான இடம் போட்டியை கண்டுகளிக்கும் ரசிகர்கள் தங்களது எண்ணங்களை தயக்கமின்றி வெளிடலாம். குழப்பக்கார ரசிகர்களுக்கு இங்கு இடமில்லை.

இலங்கையின் கால்பந்தாட்ட முன்னேற்றத்துக்கும் அதனால் உதவிட முடியும் எனவும் மொஹட்டி மேலும் கூறினார்.

இலங்கை கால்பந்தாட்டத்துக்கு உதவுவதற்காகவே கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் நாங்கள் ஒன்றியுள்ளோம். அவர்களுக்கு நாங்கள் உதவியுள்ளோம். இங்கு வரும்படி அழைப்பும் விடுத்துள்ளோம். எங்கள் கால்பந்தாட்ட சங்க அதிகாரிகள், வீரர்கள், அனுசரணையாளர்களுக்கு இலவசமாகவே இங்கு வர முடியும்.

சாதரணமாக ஒருநாளைக்கு 250 ரசிகர்கள் வருகிறார்கள். கிழமை நாடகளில் இது 350 ஆக அதிகரிகின்றது. இறுதிப் போட்டிக்கு அநேக ரசிகர்களை நாம் எதிர்பார்க்கின்றோம். இறுதிப் போட்டி ஹோட்டலினுள்ளும் காண்பிக்கவுள்ளோம்.

‘இக்கால்பந்தாட்டக் கிராமத்தில் ரசிகர்களுக்காக ஒரு போட்டியையும் ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கான பரிசாக இரவுநேர விருந்துக்கான “வவுச்சர்” உம், உதைபந்து மற்றும் பல பரிசுகளை போட்டி நடைபெறும் வேளையில் பெற்றுக்கொடுக்க நாம் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

இங்கு போட்டியைக் கண்டு ரசிப்பதற்கு பிரபுக்களும் வருகை தருகிறார்கள். அண்மையில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்டின் உடல்கூற்று வைத்தியராகக் கடமைபுரியும் வைத்திய நிபுணர் அர்ஜுன டி சில்வா ஆகியோரும் வந்திருந்தனர்.

கால்பந்தாட்ட போட்டியை ரசிக்கவும் அதை பிரபலப்படுத்தவும் நாம் செய்யும் இந்தக் கைங்கரியத்தைப் பற்றி சனத் ஜயசூரியவிடம் வினவிய போது: “இது ஒரு நல்ல காரியம். நான் கிரிக்கெட் வீரர் ஆனால் கால்பந்தாட்டமும் எனது விருப்பமான விளையாட்டாகும். இதன் மூலம் இலங்கையில் கால்பந்தாட்டத்தை பிரபல்யகப்படுத்தவும் அதை ரசிகரகளிடம் எடுத்துச் செல்லவும் இதுபோன்ற செயல் உதவும்’ என்று கூறினார்.

இது பற்றி வைத்திய நிபுணர் அர்ஜுன் டி. சில்வா: “இம்மாதிரியான சூழலில் கால்பந்தாட்டப் போட்டியை ரசிப்பதற்கு கிடைத்தமை மகிழ்ச்சி.

எமது நாட்டு மக்கள் கால்பந்ததாட்டத்துடன் இணைவதும் மகிழ்ச்சியே. அதே போல் ஒரு நாள் எமது கால்பந்தாட்ட அணியும் இதுபோன்ற போட்டியில் விளையாடக் கிடைக்கும் என்று எதிர்பார்கிறேன்” என்றார். “நான் இங்கிலாந்தில் நடைபெறும் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகளையும் ரசித்துப் பார்ப்பேன். அதனால்தான் இங்கு வருகிறேன். எனது குடும்பத்தவரும் இங்கு வருகிறார்கள்” என்று கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்விடத்தில் இருக்கும் ஒழுக்கம், அமைதி, சுதந்திரம் போன்றவைகளுக்காகவும் இங்கு வருபவர்கள் உள்ளனர். அப்படியானவர்கள் அடிக்கடி வருகிறார்கள். சஞ்சானி அப்படிப்பட்ட ஒரு யுவதியாவார். அவருடைய காதலருடன் இங்கு வருவது கால்பந்தாட்ட போட்டியை கண்டு மகிழும் ரசிகர்களுடன் அந்திப்பொழுமைக் கழிக்கவே என்றார் அவர்.

பல வயதுக்காரர்கள், பல இன கால்பந்தாட்ட ரசிகர்கள் கால்பந்து போட்டியின் பால் தமது கவனத்தைச் செலுத்தவும் தான் விரும்பிய அணிக்கு தனது ஆதரவை வழங்கி ஆராவரமில்லாமல் போட்டியை ரசிக்க முடியுமென்பதால் அநேகர் போட்டியை கண்டுகளிக்க இப்பொழுது இவ்வாறான இடங்களை நாடி வருகின்றனர்.

Comments