வரி அறவீட்டை குறைத்தால் எரிபொருள் விலையை குறைக்கலாம் | தினகரன் வாரமஞ்சரி

வரி அறவீட்டை குறைத்தால் எரிபொருள் விலையை குறைக்கலாம்

எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது மக்களைப்பற்றியும் சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதுடன் எரிபொருளுக்கான வரியை குறைத்தால் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க முடியும் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் போன்ற மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் போது இதனைவிட மிக ஆழமாக சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அர்ஜூன குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதி தந்து ஏமாற்றமாட்டேன். காணாமல் போனோர் தொடர்பாக பக்கச்சார்பற்ற, சுயாதீனமான விசாரணைகளை நடத்துவோம். பிரதேச அலுவலகங்களில் உங்களிடமிருக்கும் தகவல்களை வழங்கி ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

காணாமல் போனோரின் அலுவலகம் வடக்கில் 5 கிளைகளை ஆரம்பித்துள்ளது. அந்த 5 கிளைகளின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் ஆராயப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்படும்.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்து நீங்கள் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன், எனது விடயங்களை நீங்கள் செவிமடுக்க வேண்டுமென்பதுடன், உங்களின் பிரச்சினைகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான், உங்கள் உறவுகளை தேடித் தருவேன் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்.

இந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக நீதியான விசாரணைகளை முன்னெடுத்து, உங்களுக்கு ஏற்ற நீதியைப் பெற்றுத் தருவேன்.

கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்த உங்களுக்குப் பாரிய பொருளாதார பிரச்சினைகள் இருப்பதென்பதை நான் அறிவேன். உங்களுக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதையும் நான் அறிவேன்.

பொருளாதார உதவி மற்றும் நிவாரணங்கள் கிடைக்காத குடும்பங்களின் நலன்கள் கருதி உரிய முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு அறிக்கைகள் முன்வைக்கவுள்ளோம் என்றார்.

எமது பிள்ளைகள் இறந்தாலும் பரவாயில்லை. எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். உங்களின் நிவாரணங்கள் எமக்குத் தேவையில்லை என மக்கள் தெரிவித்தனர்.

Comments