மெதகம பிபிலை யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலைக்கு குடிநீர் உதவி | தினகரன் வாரமஞ்சரி

மெதகம பிபிலை யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலைக்கு குடிநீர் உதவி

Access International Projects மற்றும் Daikin Air-conditioning India ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மெதகம பிபிலை யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலைக்கு குடிநீர் மற்றும் ஏனைய வசதிகளுக்கு உதவியுள்ளன

தண்ணீர் மனிதனின், குறிப்பாக சிறுவர்களின் அடிப்படைத் தேவையாகும்.

சுத்தமான தண்ணீர் கிடைக்கப்பெறுவது வாழ்வில் சிறந்த மாற்றங்களுக்கு வழிகோலுகின்றது. சிறுவர்கள் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல் மீது அர்ப்பணிப்புடனான ஈடுபாடு கொண்டுள்ள Access International Projects மற்றும் Daiking Air-conditioning India ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, மெதகம, பிபிலை யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலை குடிநீர் வசதியை அண்மையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

மேலும், அதன் தாய்நிறுவனமான Access Group இன் தேசம் வளம் பெற எதிர்காலத் தலைமுறைகளுக்கு உதவ வேண்டும் என்ற அதன் குறிக்கோளுக்கு அமைவாக, Access International Projects மற்றும் Daiking Air-conditioning India ஒன்றிணைந்து அதன் முதலாவது வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அப்பாடசாலையில் குழாய்க்கிணறு ஒன்றைத் தோண்டி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கியுள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலை ஒரு கலவன் பாடசாலையாக இயங்கி வருவதுடன், தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களில் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

நாட்டில் வறட்சியான வலயத்தில் மிகவும் ஏழ்மையான பிரதேசமாக அது இனங்காணப்பட்டுள்ளதுடன், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது இப்பிராந்தியத்திலுள்ள சமூகங்களுக்கு தீர்வின்றிய ஒரு தொடர் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. இப்பாடசாலை தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக அது பல சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது.

தயாள குணமுள்ள அயலவர் ஒருவர் தேவையான தண்ணீரின் ஒரு பகுதியை வாராந்த அடிப்படையில் பிளாஸ்திக் தாங்கியொன்றில் நிரப்பி, உதவி வந்துள்ளார். ஆசிரியர்களும், மாணவர்களும், குறிப்பாக சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Comments