உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: | தினகரன் வாரமஞ்சரி

உலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு நிறைந்ததாக இருந்தது. உலக மக்கள் பார்வை அனைத்தும் சிங்கப்பூரை நோக்கியே இருந்தது.

வடகொரியா உருவான பின், வடகொரியா மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் சந்தித்திக் கொண்டது இது முதல் முறை.

13 நொடிகள் கைக்குலுக்கள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஷங்க்ரி லா ஹோட்டலிலிருந்தும் வடகொரிய தலைவர் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலிலிருந்தும் சரியாக 8:30 மணிக்கு சந்திப்பு நிகழும் சென்டோசா ஹோட்டலுக்கு கிளம்பினர். சரியாக 9 மணிக்கு இருவரும் கைகொடுத்து பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இவர்களது கைக்குலுக்கள் சரியாக 13 நொடிகள் நீடித்தன.

பெரிய திரையில் கண்டுகளித்த மக்கள்

சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஹோட்டலைச் சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை நேரலையில் கண்டனர். அமெரிக்காவில் பெரிய திரைகள் ஏற்படுத்தி ஆங்காங்கே மக்கள் கண்டுகளித்தனர். அந்த அளவுக்கு இந்த சந்திப்பு அதீத கவனத்தை ஈர்த்திருந்தது சமூக வலைதளங்களிலும் வெளிப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பாலமாக இருந்த தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர்.​ தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் வீடியோ நேரடி ஒளிபரப்பு மூலம் ட்ரம்ப்- - கிம் சந்திப்பைக் கண்டார். மேலும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் நடந்த உச்சிமாநாட்டின்போது, இரு தலைவர்களும் நிமிடங்கள் பேசிக் கொண்டனர். 1800 நேபாள கூர்க்காக்கள், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், வட கொரிய ராணுவ அதிகாரிகள், சிங்கப்பூர் பொலிஸ் என பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் இரு தலைவர்களும் பேசினர்.

கையெழுத்தான ஒப்பந்தம்

இந்த சந்திப்புக்கு பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, 'வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி ஒழிப்பு வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்று டிரம்ப் கூறினார்.

இந்த சந்திப்பு பல தடைகளை உடைத்து நடந்துள்ளதாகவும், இந்த சந்திப்பால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் என தான் நம்புவதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது தொடர்பாக ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், 'முக்கிய ஆவணத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அது விரிவான ஆவணமும் கூட. நாங்கள் இன்னும் பல முறை கூட சந்திக்க உள்ளோம். கிம் ரொம்பவே திறமையானவர் என்பதையும், தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதையும் அவருடனான சந்திப்பின்போது, அறிந்து கொண்டேன் என்றார். வெள்ளை மாளிகைக்கு கிம்மை வரவேற்பீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு, கண்டிப்பாக அழைப்பேன் என்றார்.

கிம் ஜோங் கூறும்போது, கடந்த காலத்தை நாங்கள் மறக்க இருக்கிறோம். எனவே வரும் காலம் இந்த உலகுக்கே இனிமையானதாக அமையும் என்றார்.

முதல்கட்ட சந்திப்பு முடிவடைந்த நிலையில், இரு நாட்டு தலைவர்களும் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு ட்ரம்ப் -கிம் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.

சுவை மற்றும் ஆடம்பர உணவுக்கு சிங்கப்பூர் அரசு முக்கியத்துவம் தந்திருந்தது. ஸ்டார்டர்ஸ் வகையில், பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்ல், அதனுடன் அவகடோ சலாட். பச்சை மாங்காய் கெரபு அதனுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ்.

இது தவிர 'Oiseon' எனப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற உணவுவகையொன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுகிறது. வெள்ளரிக்காயுடன், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுவது இது.

இதனைத் தொடர்ந்து சிறிது ஓய்வுக்கு பிறகு, இரு தலைவர்களும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

(​தொடர் 21ஆம் பக்கம்)

 

Comments