புதிய சாதனை படைத்த ஷகிப் அல் -- ஹசன் | தினகரன் வாரமஞ்சரி

புதிய சாதனை படைத்த ஷகிப் அல் -- ஹசன்

சேன் டோவ்ரிச் 12 
பெளண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்களினை 
குவித்திருந்தார்   

 

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்- -ஹசன், சர்வதேச போட்டிகளில் மிக வேகமாக 10000க்கும் அதிகமான ஓட்டங்களும், 500 விக்கெட்களும் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்

ஷகிப் -ஹசன் பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடி வருகிறார், இவர் பங்களாதேஷ் ரி 20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான தலைவராகவும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். சிறப்பான துடுப்பாட்ட திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார்.

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பங்காளாதேஷ் கிரிக்கெட் வீரர்களுல் ஒருவராக இவர் அறியப்படுகிறார். அனைத்து வகை கிரிக்கெட் வடிவங்களுக்குமான சிறந்த சகல துறை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2015-ம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி 20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் சகலத் துறை வீரருக்கான சர்வதேச கிரிக்கெட் அவையின் தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் பங்காளதேஷ் துடுப்பாட்ட வீரர் மற்றும் முதல் சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

சிறிது காலம் தரவரிசையில் பின்தங்கிய இவர் விரைவில் மீண்டும் முதலிடம் பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த பங்களாதேஷ்வீரர் எனும் சாதனை படைத்தார். 2017 ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் இவரும் மகமதுல்லாவும் இணைந்து 209 பந்துகளில் 224 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்ரன்கள் குவித்த பங்களாதேஷ் இணை மற்றும் சம்பியன்ஸ் கோப்பையின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனைகளைப் படைத்தனர்.

இந்நிலையில், ஷகிப் அல்- - ஹசன் புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் மிக வேகமாக 10000க்கும் அதிகமான ஓட்டங்களும், 500 விக்கெட்களும் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,594 ஒட்டங்களும், 188 விக்கெட்களும் எடுத்துள்ளார். 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5,243 ஒட்டங்களும், 235 விக்கெட்களும் எடுத்துள்ளார். மேலும் 63 ரி 20 போட்டிகளில் விளையாடி 1237 ஒட்டங்களும், 75 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை வீரர் தரவரிசையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்திலும், ரி20 போட்டிகளில் 3-வது இடத்திலும் உள்ளார் ஷகிப் அல்- ஹசன்.

Comments