MINI ஆர்வலர்களுக்காக ‘THE MINI ELITE’ | தினகரன் வாரமஞ்சரி

MINI ஆர்வலர்களுக்காக ‘THE MINI ELITE’

Prestige Automobile (Pvt) Ltd.தனது புதிய‘THE MINI ELITE’ திட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. Botanik Bistro & Barஇல் அண்மையில் இடம்பெற்றநிகழ்வில் இந்த அறிமுகம் குறித்த அறிவித்தலை நிறுவனம் வெளியிட்டிருந்தது. MINI வாகன உரிமையாளர்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டமாக‘THE MINI ELITE’ அமைந்துள்ளதுடன், இலங்கையில் MINI இன் பயணத்தில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக இது அமைந்திருக்கும். MINI உரிமையாளர்களுக்கு வாழ்க்கைத்தரம், நவநாகரிகம், சாகசம், விருந்தோம்பல், விற்பனைக்கு பிந்தியசேவை போன்ற பல அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.

ஒரேவிதமான சிந்தனைகளைக் கொண்ட MINI உரிமையாளர்களுக்கு ஈடுபாடு, வலையமைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் நிபுணத்துவ பகிர்வு போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய கட்டமைப்பாக‘THE MINI ELITE’அமைந்திருக்கும். இதை எய்துவதற்கு,மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல வர்த்தக நாமங்களுடன் கைகோர்த்து பிரத்தியேகமான அனுகூலங்கள் மற்றும் அனுபவங்களை பெற்றுக் கொடுக்க MINI முன்வந்துள்ளது.‘THE MINI ELITE’லோயல்டி நிகழ்ச்சியினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் ஏனைய அனுகூலங்களுக்கு மேலானதாக இவை அமைந்திருக்கும்.

இந்த திட்டத்தின் அறிமுகம் தொடர்பில் Prestige Automobile Ltd.இன் பணிப்பாளர் ஜான்- கிறிஸ்டியன் ரொய்டர் கருத்துத் தெரிவிக்கையில்,“இலங்கையில் முதலாவது MINI லோயல்டி திட்டத்தை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ‘THE MINI ELITE’ என்பது எமது சகல MINI வாடிக்கையாளர்களுக்கும் விறுவிறுப்பான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், MINIஇன் உறுதியான வாழ்க்கைப் பாணி அங்கத்துடன் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘THE MINI ELITE’ லோயல்டி திட்டத்தினூடாக, எமதுவாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை எமது பங்காளர் வர்த்தக நாமங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். அத்துடன், நீடித்து நிலைத்திருக்கும் நினைவுகளையும் வழங்கும். ‘THE MINI ELITE’ நிகழ்ச்சியினூடாக பிரத்தியேகமான அனுகூலங்கள் வழங்கப்படுவது மட்டுமின்றி,வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நினைவுகளையும் வழங்கும்.”என்றார்.

‘THE MINI ELITE’அங்கத்தவர்கள் தற்போதுதாம் விரும்பும் ஆடைகளைL’Atelier Touch மற்றும் The Design Collective ஆகியவற்றில் கொள்வனவு செய்துகொள்ளலாம். Teardrop Hotels and TaruVillas இல் தமது பொழுதை விசேட விலையில் செலவிட முடியும்.

Comments