மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நேரில் உணர முடிந்தது | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நேரில் உணர முடிந்தது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் தமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை நேற்று சனிக்கிழமை(12) முதற் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்துள்ளது.

காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமயில் 7 பேர் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் என்னங்களையும், அவதானங்களையும் நாங்கள் அவதானித்துக்கொண்டு செயற்பட இருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.அவர்கள் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இவ்விடத்தில் இடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சிறந்த முறையில் ஏற்பாடு செய்து தந்த உதவி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Comments