“Comfort Dwellings” வீடமைப்புத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

“Comfort Dwellings” வீடமைப்புத் திட்டம்

அதிநவீன இல்லங்களுக்கான புத்தாக்கமான எண்ணக்கருக்கள் மற்றும் திட்டங்களுடன் இலங்கையில் புதிதாக மலர்ந்துள்ள அசைவற்ற ஆதன இருப்பு நிர்மாணிப்பாளரான Landmark Developers, புத்தாண்டில் புத்தம்புதிய, கட்டுப்படியாகும் விலைகளில் கிடைக்கின்ற வீடமைப்பு எண்ணக்கருவுடன் “Comfort Dwellings” இனை ஆரம்பித்துள்ளது.

“Comfort Dwellings” செயற்திட்டமானது கட்டுப்படியாகும் விலைகளில், அதி உயர் தரத்திலான இல்லங்களை, அதிநவீன வடிவமைப்புக்கள் மற்றும் கட்டடக்கலை நயத்துடன் வழங்குகின்றது. நிலைபேற்றியலைப் பேணுகின்ற வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து இல்லங்களும் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்படவுள்ளன. தலாஹேன, மாலபே, அத்துருகிரிய, தலங்கம, கடுவளை, கொட்டாவ மற்றும் ஹோமாகம பகுதிகளில் அமைந்துள்ள “Comfort Dwellings” இல்லங்கள், ஒரு குடும்பம் செளகரியமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களில் காணப்படுகின்றன. அனைத்து இல்லங்களும் ஒரு அடுக்கு அல்லது இரு அடுக்கு இல்லங்களாக 1,000 சதுர அடி மொத்த விஸ்தீரணத்திற்கும் மேலாக, 2-3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், 2 வாகனத் தரிப்பிடங்கள் மற்றும், பன்ட்ரி கபோர்ட் (pantry), உணவு அறை, சமையலறை மற்றும் வரவேற்பு அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

Landmark இன் வடிவமைப்பு அணியுடன் ஆலோசனையை மேற்கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான வகையில் வீடுகளை பிரத்தியேகமாக வடிவமைப்புச் செய்ய முடிவதுடன், அதிநவீன இல்லத்தை வழங்குவதற்காக அதிநவீன தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுகின்றது. தமக்கென சொந்தமாக முதன்முறையாக இல்லம் ஒன்றின் மீது முதலீட்டை மேற்கொள்ள விரும்புகின்ற, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்கள் போன்ற நடுத்தர வருமான மட்டத்திலுள்ளவர்களுக்கு இந்த இல்லங்கள் மிகவும் பொருத்தமான தெரிவுகளாக அமைந்துள்ளன. “Comfort Dwellings” இல்லங்கள் அனைத்தும் உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதி அங்கீகாரம், நில அளவை, கடன் வசதிகள், புலம்பெயர் சமூகத்திற்கு வரிச் சலுகைகள், சட்ட மற்றும் நிதி ஆலோசனைகள், தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்கள், நிலையான தொலைபேசி இணைப்புக்கள், கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கள் மற்றும் பேணற்சேவை வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். இல்லங்களை அமைப்பதற்கான பெரும்பாலான மூலப்பொருட்களை மிகவும் நன்மதிப்பு மிக்க, சர்வதேச தர நடைமுறைகளுக்கு நிகரான அதியுயர் தர வர்த்தகநாமங்களை வழங்கும் உள்நாட்டு நிறுவனங்களின் மூலமாகவே Landmark Developers கொள்வனவு செய்து வருகின்றது. 

Comments