தேயிலை விருதுகள் வழங்கும் விழாவில் EMPIRE TEASக்கு விருது | தினகரன் வாரமஞ்சரி

தேயிலை விருதுகள் வழங்கும் விழாவில் EMPIRE TEASக்கு விருது

நாட்டின் முதல் மூன்று சிறந்த உயர்தர தேயிலை ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள Empire Teas நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற தேசிய தேயிலை விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த மொத்த ஏற்றுமதியாளர் மற்றும் உயர் அந்நிய செலாவணி ஈட்டுநர் ஆகிய பிரிவுகளில் இரண்டாமிடங்களை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை இலங்கை தேயிலை சபை ஏற்பாடு செய்திருந்தது.

2016ம் ஆண்டு தேயிலைத்துறைக்கு நெருக்கடிகள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்ததுடன், உற்பத்தி அளவுகள் மற்றும் வருமான மட்டம் ஆகியன பெருமளவு சரிவடைந்திருந்தன. ஆனாலும், 2017ம் ஆண்டை பொறுத்தமட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7சதவீத உற்பத்தி அதிகரிப்பு பதிவாகியிருந்தது. துறையில் முன்னோடி எனும் வகையில், Empire Teas இதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கையின் தேயிலை சபையிடமிருந்து இந்த சாதனைக்குரிய விருதையும் பெற்றுள்ளது.

ஏற்றுமதி அளவாக வருடமொன்றில் 14 மில்லியன் கிலோகிராமை பதிவு செய்துள்ளதுடன், இதில் மொத்த தேயிலை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை ஆகியன அடங்குகின்றன. Hyson, Thurson, Regalo ஆகிய நாமங்களில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பா, மத்திய கிழக்கு, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் அடங்கலாக பிரதான ஏற்றுமதி பிராந்தியங்களில் இலங்கைத்தேயிலையின் தூதுவராக Empire Teas திகழ்கிறது.

தேசிய தேயிலை விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர் மற்றும் உயர் வெளிநாட்டு வருமானமீட்டுநர் ஆகிய விருதுகளில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். எமது உலகளாவிய ரீதியில் காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான தேயிலையையும், சேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு இந்த விருதுகள் முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

இந்த விருதுகளை பெற்றுக்கொண்டதனூடாக மேலும் நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றவும், ஆரோக்கியமான வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்தவும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை கட்டியெழுப்பவும் உதவியாக அமைநதுள்ளது என லுஷாந்த டி சில்வா தெரிவித்தார். 

Comments