அரச சேவைக் கட்டணங்களை இலகுவாக்கும் DirectPay, PayMedia | தினகரன் வாரமஞ்சரி

அரச சேவைக் கட்டணங்களை இலகுவாக்கும் DirectPay, PayMedia

தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மாகாண சபகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலத்திரனியல் அரசசேவைக் கட்டணம் செலுத்தும் முறைமையினை இலகுவாக்க தகவல் தொழில்நுட்ப முன்னோடிகளாக DirectPay மற்றும் PayMedia என்பன முன்வந்துள்ளன.

அரச சேவைக்கட்டணங்களை இலகுவாகச் செலுத்தும் வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவரகத்தினால் (ICTA) அறிமுகப்படுத்தப்பட்டதே eLocal Government (eLG) services ஆகும். மக்கள் வினைத்திறன் மிக்க ஆன்லைன் மூலமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள eLG உதவுகின்றது. டிஜிற்றல் கொடுக்கல் வாங்கல்களை விரைவானவையாகவும், ஒப்பீட்டளவில் வசதியானவையாகவும், அரச சேவைகளை அணுகுவதில் தனி நபர்களின் தேர்வாகவும் அது அமைகின்றது. PayMedia மற்றும் DirectPay என்பன இலத்திரனியல் அரச சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான இரண்டு வெவ்வேறான முறைகளை மில்லியன்கணக்கான இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. DirectPay app மூலம் தங்களது கட்டணங்களைச் செலுத்த விரும்புவோர் அந்த அப்ளிகேஷன்களை தங்களது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் நுழைந்து குறித்த அரச சேவைக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஸமார்ட் போன் வசதிகள் அற்றவர்கள், அரச சேவைக்கட்டணங்களைச் செலுத்துவதற்கான நுழைவாயில்கள் எங்குள்ளன என்பதனை அறிந்து அங்கு வைக்கப்ப ட்டுள்ள இயந்திரத்தினுள் குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி கட்டணங்களைச் செலுத்தலாம்.

எல்லா கட்ட்ண நுழைவாயில்களும், கிழமையில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் தடையற்ற கட்டணம் செலுத்தும் அனுபவத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

வங்கிகள், நிதிசார் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, தீர்வுகளை வழங்கும் PayMedia என்பது ஒரு நிதிசார் தொாழில்நுட்ப (FinTech) நிறுவனமாகும். பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றதன் மூலம் இந்நிறுவனம் தான் ஒரு முற்றுமுழுதான புத்தாக்கம் மிக்க நிறுவனம் என்பதை நிலை நிறுத்தியுள்ளது. அது நாடெங்கிலும் 180 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு அதரவளிக்கின்றது. 

Comments