வாகன வர்த்தகத் துறையில் கொள்முதல் தீர்வுகளை வழங்க Omentra.com உடன் கைகோக்கும் Hyundai Lanka | தினகரன் வாரமஞ்சரி

வாகன வர்த்தகத் துறையில் கொள்முதல் தீர்வுகளை வழங்க Omentra.com உடன் கைகோக்கும் Hyundai Lanka

இலங்கையின் முதன்மையான கொள்முதல் சேவை வழங்குனரான Omentra.com ஆனது, நாட்டின் வாகன வர்த்தகத் துறைக்கான டிஜிட்டல் கொள்முதல் தீர்வுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், சந்தைக்கு முதல்தடவையாக சேவைகளை அறிமுகப்படுத்தும் வலைத்தளமாக மீண்டும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

சந்தையில் இந்தப் புத்தாக்கம் மிக்க தீர்வினை வழங்குவதற்காக Omentra.com, அண்மையில் Hyundai Lanka (Pvt) உடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது. இந்தப் பங்குடமையானது, டிஜிட்டல் கொள்முதலின் அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சியினைக் காட்டும் மைல்கல்லாக இருப்பதோடு, வாகன விற்பனைத்துறையில் உள்ளோருக்கும் வாடிக்கையாளருக்கும் முற்றுமுழுதாகப் புதிதான பல வாய்ப்புகளையும் வழங்குகின்றது.

Omentra.com இன் செயற்பாட்டுப் பிரிவின் தலைவர் நதுன்குமார கருத்துக் கூறுகையில் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ஆன்லைனில் கொள்வனவு செய்து பழக்கப்படாதவர்கள். அவர்கள் எல்லா சாத்தியமான வழிகளிலிருந்தும் பெறுவதற்கும், தமக்குத் தேவையான சகல தகவல்களையும் ஒப்பீடு செய்வதற்கும் எதிர்காலத்தில் இது வழிவகுக்கும். விரும்பிய வாகனத்தைக் கூட ஒரு விசைப் பலகையை அழுத்தவதன் மூலம் கொள்வனவு செய்வதற்கு, தங்குதடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தினைப்பெறும் வகையில், வாடிக்கையாளர்களின் வாழ்க்கைப் பாணிக்கேற்ற வகையில், கூட்டாண்மை நிறைவேற்றதிகாரிகள் வர்த்தகத் துறையினரை இலக்குவைத்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வாடிக்கையாளர் சேவைகள், சந்தைப்படுத்துதல், விற்பனை என்பனவற்றில், முன்னேற்றத்தினைக்கான அவர்கள் வாடிக்கையாளர் பகுப்பாய்வினை திறம்பட மேற்கொள்வது அவசியமானது.

விநியோகச் சங்கிலியை முன்னேற்றுவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான தகவல்களை வழங்கி, Omentra.com இன் மாதிரியானது தொழிற்றுறையின்் இவ்விலக்குகளை வெற்றிகொள்ள வழிவகுக்கின்றது அதேவேளை வாடிக்கையார்களின் தேவைகளை உரியகாலத்தில், வினைத்திறன்மிக்க வகையில் தீர்த்தும் வைக்கின்றது. இறுதியாக இது விற்பனை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

இதனை ஆதரித்துப் பேசிய Hyundai Lanka வின் பணிப்பாளர் ஜீலியன் ராய்ட்டர், “ டிஜட்டலாக்கம் என்பது வாகனத்துறையின் வியாபார மாதிரிகளை மீள வரையறை செய்கின்றது. தகவல்களைப் பரிமாறவும், ஒன்றிணைந்து தீர்மானமெடுக்கவும், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியையும் ஒருங்கிணைத்தல் என்பதே முன்னோக்கிச் செல்வதற்கான வழியாகும். 

Comments