திருமணம் பற்றி அனுஷ்கா வெளியிட்ட உண்மை தகவல்! | தினகரன் வாரமஞ்சரி

திருமணம் பற்றி அனுஷ்கா வெளியிட்ட உண்மை தகவல்!

நடிகை அனுஷ்கா அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள பாகமதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாகுபலி படத்திற்கும் பாகமதி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பாகமதி திகில் பட கதை. சஞ்சனா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்துள்ளேன்.

எனக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் நெருக்கடி கொடுக்கிறார்கள் என சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. நல்ல கணவர் கிடைக்கட்டும். எனக்கு அவரை பிடித்தால் தான் திருமணம்.

உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் எல்லோரையும் திருமணத்திற்கு அழைப்பேன். அவர்களின் வாழ்த்துக்களோடு எனக்கு திருமணம் நடக்கும் என கூறினார். 

Comments