வளர்ந்து வரும் வீரராக ஹசன் அலி | தினகரன் வாரமஞ்சரி

வளர்ந்து வரும் வீரராக ஹசன் அலி

ஐ.சி.சி-க்கான 2017-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை ஐ.சி.சி நேற்றுமுன்தினம் அறிவித்தது. வளர்ந்து வரும் வீரருக்கான விருதிற்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷதாப் கான், குல்தீப் யாதவ், அல்சாரி ஜோசன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மேத் ரென்ஷா ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

இதில் ஹசன் அலி வளர்ந்து வீரும் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை பெறும் முதல் பாகிஸ்தான் வீரர் இவராவார்.

2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சம்பியன் டிராபி தொடரில் பாகிஸ்தான் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணிக்காக 18 போட்டிகளில் விளையாடியுள்ள ஹசன் அலி 45 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விரைவாக (24 ஒருநாள்) 50 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் ஜோஷ் ஹசில்வுட், முஷ்டாபிஜூர் ரஹ்மான், ஸ்டீவன் பின், பீட்டர் சிடில் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இதற்கு முன் இந்த விருதை பெற்றுள்ளனர். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.