‘MELBN QST RB 500’ இரும்பு கம்பிகள் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

‘MELBN QST RB 500’ இரும்பு கம்பிகள் அறிமுகம்

இலங்கையின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான Melbourne Metal (Pvt) Ltd ‘MELBN QST RB 500’ இரும்பு கம்பிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய உற்பத்தி குறித்து, தலைமை அதிகாரியான (CEO) எம். ஏ. றம்ஸி கருத்துக் கூறுகையில், எமது பிந்திய தயாரிப்புகளான GI PIPE மற்றும் Box Bars ஆகியன இலங்கையில் விற்பனையாகும் சிறந்த கம்பிகளாகும், இவை திடமான, நீண்டகால பாவனைக்குரிய மற்றும் உயர்தரமான உற்பத்திகளாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் MELBN brand இன் தூதர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மஹேல ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், MELBN நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையாகவுள்ளது. MELBN இரும்பு கம்பி தேசிய உற்பத்தியாகும். எங்கள் சக்தியே தேசத்தின் சக்தியாகும் என்ற MELBN கோஷத்துக்கு அமைய தேசத்தின் அபிவிருத்திக்கு எமது நாட்டின் உற்பத்தியையே நாடுவோம். எமது நாட்டின் அபிவிருத்தியில் MELBEN பங்களிப்பு எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

MELBN இரும்பு கம்பிகள் SLS அங்கீகாரம் பெற்றுள்ளது. இலங்கையின் மதிப்புக்குரிய மதிக்கப்படும் யுத்த வீரர்களினதும் சமூகத்தின் நலனுக்காகவும் 500 வீடுகளை நிர்மாணிக்க ஒரு திட்டத்தை MELBN ஆரம்பித்துள்ளது. எமது நாடு பசுமையானது என்ற திட்டத்தின் ஊடாக 100,000 மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. MELBN இரும்பு கம்பிகளின் விற்பனை நிலையங்கள் இலங்கை முழுவதுமுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments