சாதனைகளை நிலைநாட்டி சர்வதேச ரீதியில் புகழாரம் பெற்ற OPPO | தினகரன் வாரமஞ்சரி

சாதனைகளை நிலைநாட்டி சர்வதேச ரீதியில் புகழாரம் பெற்ற OPPO

உலகின் முன்னணி ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான OPPO இரண்டு சாதனைகளை கடந்த 2017ன் இறுதிப்பகுதியில் எய்தியிருக்கிறது. GSM Arena வின் 'Top 10 By Daily Interest' தரப்படுத்தலில் முதல் நிலையை எய்தியுள்ளதுடன், ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக இந்த நிலையைத் தக்கவைத்திருந்ததுடன் தன்னிறைவான வாடிக்கையாளர் - ஸ்மார்ட் ஃபோன்கள் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

GSM Arena தனது 43வது வாரத்துக்கான ஆய்வின் போதுThe OPPO F5 leaped straight to the வழிஎன குறிப்பிட்டிருந்தது. தனது 46ஆவது வார ஆய்வின்போது, GSM Arena குறிப்பிடுகையில், எமது டொப் 10 நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நடைபெற்ற போதிலும், OPPO F5 தொடர்ந்தும் தனது முதல் ஸ்தானத்தை தக்கவைத்துக்கொண்டதுடன், 4 வாரங்களாக இந்நிலையை பேணியுள்ளது எனக்குறிப்பிட்டிருந்தது. 49ஆவது வாரத்தில், பல முன்னணி வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில் OPPO F5 தொடர்ச்சியாக முன்னிலை வகித்திருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த OPPO ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி, சர்வதேச ரீதியில் கெளரவம் பெற்றமை எமக்கு பெருமை சேர்ப்பதுடன், நாம் எய்துள்ள வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. GSM Arena மற்றும் Canstar Blue ஆகியன தமது தரப்படுத்தல்களை வாடிக்கையாளர்களின் தெரிவுகளின் அடிப்படையில் மேற்கொள்கின்றன. ஆரம்பம் முதல், நுகர்வோரின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு நாம் எமது சாதனங்களை உற்பத்தி செய்து, நுகர்வோரின் வரவேற்பையும், தெரிவையும் நாம் பெற்றுள்ளோம் என்றார். 

Comments