சிறந்த சுற்றாடலுடன் முன்மாதிரியான பொருளாதாரம் | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த சுற்றாடலுடன் முன்மாதிரியான பொருளாதாரம்

* கொழும்பில் மக்கள் நலத் திட்டங்கள்

* பெண்களை பலம் மிக்கவர்களாக்க

பல்வேறு வேலைத்திட்டங்கள்

* கொழும்பு மக்கள் சரியான தீர்மானம்.

 

மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர், மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக பிரதான பிரதானி போன்ற உயர் பதவிகளை வகித்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நாளைய தினத்தில் கொழும்பின் முதலாவது பெண் மேயராக முடிசூட்டிக் கொள்வார்.

ஐக்கிய தேசியக்கட்சி உங்களை கொழும்பு நகர மேயர் வேட்பாளராக பெயரிட்டுள்ளது. நீண்டகாலமாக கொழும்பு நகரை ஐக்கிய தேசியக் கட்சியே நிர்வகித்து வந்துள்ளது. நீங்கள் என்ன மாதிரியாக கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யவுள்ளீர்கள்?

கொழும்பு எமது நாட்டின் பிரதான பொருளாதார மத்திய நிலையம்

எமது நகரின் குடிமக்களுக்கும் இலட்சக்கணக்காக கொழும்பில் தங்கியுள்ள குடி மக்களுக்கும் நாங்கள் சேவையாற்றுகின்றோம்.

உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான பல்வேறு வாழ்க்கைமட்டத்திலுள்ள மக்களுக்காக, ஊழலற்ற சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நீதியான சமூக, பொருளாதார திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்.

சக்தி மிக்க சுற்றாடலுடன் முன்மாதிரியான பொருளாதாரம் எமக்குத் தேவை.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதன் மூலம், மிகுந்த பயன்மிக்க பொருளாதார முறையை நகரில் ஏற்படுத்துவதால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

துறைமுக நகரம் எமக்கு ஒரு புதிய சொத்தாகும். அதேபோல் மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினை ஒரு பாரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற சிறந்த சுற்றாடலுடன் கூடிய திட்டங்களுடன் பொருளாதார மத்திய நிலையமாக கொழும்பு நகரை மாற்றியமைக்கவேண்டும்.

நீங்கள் கூறியவாறு அதிக வருமானம் பெறுபவர்கள், குறைந்த வருமானம் பெற்று குறைந்த வசதிகளுடன் வாழும் பல்வேறு வகையான மக்கள் சமூகத்தை திருப்திப்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்கள் இருக்கின்றதா?

சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் மலசல கூட வசதிகளுடன் கூடியவீடுகளை அமைப்பது பிரதான பிரச்சினையாகவுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் வீடு இருக்கும், வீடு இல்லாத மக்களுக்காக கெளரவ ரணசிங்க பிரேமதாச நடைமுறைப்படுத்திய நகர வீடமைப்புத் திட்டத்தை நான் மீண்டும் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவேன்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் இதற்கு பங்களிப்பு வழங்கும்.

துன்பம் மற்றும் பிரச்சினைகளுடன் வாழும் அவர்களை மீட்டெடுப்பது எனது பொறுப்பாகும்.

பரபரப்பான வாழ்க்கை நடத்தும் கொழும்பு நகரவாசிகளை மிகவும் துரிதமான, நவீன தொழில்நுட்ப அறிவு பெறச்செய்யவேண்டும். அதேபோல் அதிகாரிகளையும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் தொழில்நுட்பத்துடன் கூடிய முறையான நகரை கட்டியெழுப்பவேண்டும். பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பக்கல்வியை வழங்குவது எதிர்காலத்துக்கான முதலீடாகும். பிரதமரின் கொள்கைகளால் இந்த நோக்கத்தை புூர்த்திசெய்வது எனது எதிர்பார்ப்பாகும். உயர் மற்றும் கீழ்மட்டங்களை அப்போது ஒன்றிணைக்கமுடியும்.

கொழும்பு குறித்த உங்களது திட்டங்கள் எந்த பிரிவுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்?

சுத்தத்துக்கே முதலிடம். குப்பைப் பிரச்சினை புூதாகரமாகவுள்ளது. தற்போது இடம்பெற்றுள்ள வேலைகள் போதுமானமதாக இல்லை. மீள்சுழற்சி முறை, கல்வி மூலம் அறிவுறுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த எதிர்பார்க்கின்றேன். மீதொட்டமுல்ல பிரச்சினையை தீர்ப்பதற்கு பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்படும். நிரந்தரமான குப்பைத் தாங்கி இனங்காணப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்.

50 வருடங்கள் பழமையான மலசல மற்றும் குடிநீர்க்குழாய் தொகுதிகள், எமக்குள்ள சுமார் 300 கிலோ மீற்றர் வீதிகள் போன்றன உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதியுதவியின் கீழ் மறுசீரமைக்கப்படும். இணையதள கொடுப்பனவு வசதிகள் மற்றும் தகவல் சேவைகள் துரிதப்படுத்தப்படும். இலத்திரனியல் நகர பஸ்சேவைகள் இவ்வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும்.

மாநகர சபையின் அனுசரணையுடன் வீட்டுக்கருகில் இயற்கைப்பசளை உற்பத்தி செய்வது மற்றும் விவசாய பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்.

டெங்கு கட்டுப்படுத்தும் பிரிவை தொழில்நுட்பத்துடனும் கல்வியறிவுபூர்வமாகவும் அபிவிருத்தி செய்து குடியிருப்பாளர்களுடன் தகவல் பரிமாற்றத்தை பரவலாக்குவது.

அரச மற்றும் தனியார்துறை இணைந்து தொழில்பயிற்சி மற்றும் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தல்

முச்சக்கரவண்டிகள் மூலம் வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்களுக்கு விஷேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும்.

விளையாட்டுத்திடல், வாசிகசாலை, சனசமூக நிலையம் ஆகிய வசதிகளை மேம்படுத்தல், சகல பிள்ளைகளுக்கும் ஆங்கிலக்கல்வி வழங்குவது குறித்தும் நகர விவசாய நடவடிக்கைகள் குறித்தும் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.

பெண்களை பலம்மிக்கவர்களாக்குவது மற்றும் அரசியலில் பங்களிப்பு வழங்கச் செய்தல் தொடர்பாக நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இது தொடர்பாக நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?

எமது நாட்டிலுள்ள குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகும். அவர்களது பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அவர்களை அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யவைக்கவேண்டும்.

பணிப்பெண்கள் துன்பங்களை அனுபவித்து வியர்வை சிந்தி அனுப்பிவைக்கும் டொலர்கள் தான் இந்த நாட்டுக்கு அதிகமான வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தருகின்றது.

இதை மாற்றி சுயதொழில் செய்தல், சிறுவர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும். சிறுவர்களை பாதுகாக்கும் நிலையங்களை ஆரம்பிக்கவேண்டும். கடன் வசதிகள், நிதிக்குறைபாடுகள் நீக்கப்படுவது அதற்கு உந்துசக்தியாகவிருக்கும்.

அரச சேவையில் 62 சதவீதம் பெண்கள். இம்முறை க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களில் அதிகமானோர் பெண்கள். பல்கலைக்கழகங்களின் நிலையும் இதுதான். இருந்தும் நிறைவேற்றுத் தரத்தில் சொற்ப தொகையினரே இருக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் 30 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துக்காக தனிநபர் பிரேரணையொன்றை முன்வைக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்காகப் பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும். இதன் பிரதிபலனாக உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இது நாம் பெற்ற வெற்றியாகும்.

தேர்தலை வர்த்தகமாக்கியது, காடையர்கள் தேர்தலை முன்னெடுத்த யுகம் முடிவடைந்துவிட்டது. பெண்கள் இப்போது அரசியலில் பிரவேசிப்பதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இந்த அரசாங்கத்துக்கு 3 வருடமாகிறது. இன்றளவில் நிறைவேற்றப்பட்டவை குறித்து திருப்தியடைகின்றீர்களா?

கடன் பொருளாதாரம், ஊழல் மோசடி நிறைந்த அரச நிர்வாகம், மூன்று வருடங்களில் சீரழிந்த நாட்டைக் கட்டியெழுப்புவது சிரமமான விடயமாகும். இவையனைத்துக்கும் முன்னர் முடிந்தவரை மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2015 ஜனவரி மாற்றத்தின் மக்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறியுள்ளன.

நல்லாட்சி, சமத்துவம், தகவல் அறிதல் அவற்றில் சிலவாகும்.

அதிகாரப் பேராசையில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்துக்கு பதிலாக மக்களுக்கு பொறுப்புக் கூறும் 19 ஆவது திருத்தம் நிலை நிறுத்தப்பட்டது. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.