660 cc வாகனங்களுக்கு லீசிங் வழங்கும் HNB கிராமீன் பினான்ஸ் லிமிடட் | தினகரன் வாரமஞ்சரி

660 cc வாகனங்களுக்கு லீசிங் வழங்கும் HNB கிராமீன் பினான்ஸ் லிமிடட்

HNB கிராமீன் பினான்ஸ் லிமிடட், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 660 CC வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான லீசிங் தெரிவுப் பொதிகள் மூலம், மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

இந்த ஊக்குவிப்புத்திட்டமானது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகவுள்ளதுடன், போட்டிகரமான வட்டி வீதங்கள், எஞ்சிய மதிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட குத்தகை, தனிப்பயனாக்கப்பட்ட ஒரு நாள் சேவை, வீட்டு வாசற்படிக்கே உதவிகள், மற்றும் வாகனப் பதிவுகள், காப்புறுதிகள் உட்பட பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

இந்த ஊக்குவிப்பு காலப்பகுதியில் HNB கிராமீன் பினான்ஸ் லிமிடட் வாடிக்கையாளர்கள் விஷேட கட்டணக் கழிவுகள், இலவச சேவைகள், உத்தியோபூர்வ வாகனப் பங்காளர்களின், குறிப்பாக அசோசியேட் மோட்டர்வேஸ் பிரைவட் லிமிடட் (AMW) மற்றும் இந்திரா டிரேடர்ஸ் உட்பட நாட்டின் இதர முன்னணி வாகன விநியோக நிறுவனங்களின் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புககள் வழங்கப்படும்.

இந்த ஊக்குவிப்புத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த HNB கிராமீன் பினான்ஸ் லிமிடட் அதிகாரி, கடந்த சில வருடங்களாக 660 cc வாகனங்களுக்கான லீசிங் தேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துச் செல்வதை நாம் அவதானித்திருக்கிறோம். அண்மைய வரவு செலவுத்திட்டத்தில் இத்தகைய வாகனங்களின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாகனங்களை கொள்வனவு செய்ய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கான சரியான தருணம் இதுவென நாம் உணர்ந்து கொண்டோம் என்று தெரிவித்தார்.

660 cc வாகனங்கள் வசதியான சிறியரக வாகனங்களாகும். எரிபொருள் செயற்திறன், இடவசதி, பாதையில் அதிக இடத்தை பிடிக்காத அளவில் கவனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை உட்பட பல அம்சங்களுக்காக இந்த வாகனங்கள் மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சலுகையானது, ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் 4 வருட உத்தரவாதமுள்ள, சிறியரக, எரிபொருள் செயற்திறன்மிக்க புகழ்பெற்ற வாகனமான Suzuki Wagon R Premium Hybrid 2017 க்குப் பொருந்தும். 

Comments