அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் Fairfirst இன்சூரன்ஸ் கைகோப்பு | தினகரன் வாரமஞ்சரி

அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் Fairfirst இன்சூரன்ஸ் கைகோப்பு

மாணவர்களை ஏற்றிச்செல்லும் பாடசாலை வான்களுக்கு மஞ்சள் வர்ணம் தீட்டுவது தொடர்பான விழிப்புணர்வை வழங்குவது மற்றும் அவற்றில் பயணிக்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈடுபடும் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் Fairfirst இன்சூரன்ஸ் கைகோர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கு பாதுகாப்பான பிரயாணத்தை ஏற்படுத்துவதன் முதல் கட்டமாக, Fairfirst இன்சூரன்ஸ், அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், Fairfirst இன்சூரன்ஸினால் சம்மேளனத்துக்கு பிரத்தியேக மோட்டார் காப்புறுதித்திட்டங்கள் வழங்கப்படும், இந்த திட்டங்களினூடாக வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், முக்கியமாக குறித்த வாகனம் விபத்தொன்றை எதிர்நோக்கியிருந்தால், சிறுவர்கள், சாரதிகள் மற்றும் உதவியாளர் போன்றோருக்கு நிதிசார் உதவிகளை வழங்கும். இந்த கைகோர்ப்பு தொடர்பில் Fairfirst விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் நிரஞ்சன் நாகேந்திரா கருத்துத்தெரிவிக்கையில், “எம்மைப்பொறுத்தமட்டில் இது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. வியாபாரத்துக்கு அப்பாற்பட்ட பங்காண்மையாக இது அமைந்துள்ளது. சுய தொழிலில் ஈடுபடும் வான் சாரதிகளுக்கு உதவியாக அமைந்துள்ளதுடன், பாடசாலை சிறுவர்களுக்கு பாதுகாப்பான வகையில் தமது பாடசாலைக்கும், இல்லத்துக்கும் பயணம் செய்ய வழிகோலுவதுடன், பெற்றோருக்கும் மனநிம்மதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தமைக்கு மேலதிகமாக, Fairfirst இன்சூரன்ஸினால் சனிக்கிழமையொன்றில் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்தின் 100 பிராந்திய அதிகாரிகள் மற்றும் Fairfirst இன்சூரன்ஸின் வெவ்வேறு கிளைகளைச்சேர்ந்த விற்பனை முகவர்கள் பங்குபற்றலுடன் பயிற்சிப்பட்டறையொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சம்மேளனத்தின் பிராந்திய அதிகாரிகளை குறித்த பிராந்தியத்தின் Fairfirst விற்பனை முகவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டு இந்த பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது.

2000ம் ஆண்டில் அகில இலங்கை பாடசாலை சிறுவர்கள் போக்குவரத்து சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தற்போது இதில் 27000 பாடசாலை வான் சாரதிகள் அங்கம் வகிக்கின்றனர். இந்த சம்மேளனத்தின் தலைவர் மல்ஷி டி சில்வா கருத்துத்தெரிவிக்கையில், “Fairfirst இன்சூரன்ஸ் உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை மட்டுமின்றி, சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்” என்றார். 

Comments