இலங்கையில் Ford Power Tools களுக்கான ஏகமுகவராக Alcobronz | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் Ford Power Tools களுக்கான ஏகமுகவராக Alcobronz

Alcobronz (Pvt) Limited நிறுவனமானது இயந்திர உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் போன்றவற்றில் ஈடுபட்டுவரும் ஒரு முன்னணி பொறியியல் சாா் தொழிற்துறை நிறுவனமாக இயங்கி வருவதுடன் நவலோகா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்திற்கு முழுமையாக உரித்தான துணை நிறுவனமாகவும் காணப்படுகின்றது.

இலங்கையில் “FORD” சக்தி கருவிகள், கராஜ் கருவிகள், கைகருவிகள், சக்திகருவி உபகரணங்கள் மற்றும் தூசி உறிஞ்சிகள் போன்றவற்றிற்கான ஏகமுகவராக சமீபத்தில் இந்நிறுவனமானது நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கையானது நேரடியாக ஆர்ன்டீனா Ford மோட்டார்ஸ் உடன் கைச்சாதிடப்பட்டுள்ளதுடன் இலங்கைச் சந்தையில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படும் இத்தயாரிப்புக்கள் டுபாய் Ford Tools நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படும்.

Alcobronz நிறுவனத்தின் பரந்த விநியோக வலைப்பின்னலினுாடாக இந்த Ford தயாரிப்புக்கள் நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் இந்த பரந்த தயாரிப்புக்களின் தொகுப்பானது Ford பவர் டூல்ஸ், Ford கராஜ் டூல்ஸ், Ford ஹாண்ட் டூல்ஸ், Ford LED லைட்டிங், Ford பவர் டூல்ஸ் உபகரணங்கள் மற்றும் Ford தூசி உறிஞ்சி என்பனவற்றை உள்ளடக்குகின்றது.

Alcobronz (Pvt) Ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாக உத்தியோகத்தர்/இயக்குனர் சந்துல பெரேரா இவ்விநியோகம் குறித்து உரையாற்றுகையில், Alcobronz நிறுவனமானது தனது மரவேலை மற்றும் உலோகவேலை இயந்திர உற்பத்தியாளராக மாத்திரமன்றி விற்பனையின் பின்னரான சேவைகளிற்காகவும் தனக்கானதொரு நாமத்தை உருவாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பிராண்டான Ford Power Tools நிறுவனத்துடன் இணைவதன் மூலம் மரவேலை இயந்திரங்களிற்கான வழங்கீடு மற்றும் விநியோகத்தில் இலங்கை சந்தையின் முன்னோடியாக எங்களது நிலையை உறுதிசெய்யப்படுகின்றது என்றார். 

Comments