அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் கைகோர்க்கும் Fairfirst இன்சூரன்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் கைகோர்க்கும் Fairfirst இன்சூரன்ஸ்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பாடசாலை வான்களுக்கு மஞ்சள் வர்ணம் தீட்டுவது தொடர்பான விழிப்புணர்வை வழங்குவது மற்றும் அவற்றில் பயணிக்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈடுபடும் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் Fairfirst இன்சூரன்ஸ் கைகோர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கு பாதுகாப்பான பிரயாணத்தை ஏற்படுத்துவதன் முதல் கட்டமாக, Fairfirst இன்சூரன்ஸ், அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், Fairfirst இன்சூரன்ஸினால் சம்மேளனத்துக்கு பிரத்தியேக மோட்டார் காப்புறுதித்திட்டங்கள் வழங்கப்படும், இந்த திட்டங்களினுௗடாக வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், முக்கியமாக குறித்த வாகனம் விபத்தொன்றை எதிர்நோக்கியிருந்தால், சிறுவர்கள், சாரதிகள் மற்றும் உதவியாளர் போன்றோருக்கு நிதிசார் உதவிகளை வழங்கும். இந்த கைகோர்ப்பு தொடர்பில் Fairfirst இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் நிரஞ்சன் நாகேந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “எம்மைப் பொறுத்தமட்டில் இது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. வியாபாரத்துக்கு அப்பாற்பட்ட பங்காண்மையாக இது அமைந்துள்ளது. சுய தொழிலில் ஈடுபடும் வான் சாரதிகளுக்கு உதவியாக இது அமைந்துள்ளதுடன், பாடசாலை சிறுவர்களுக்கு பாதுகாப்பான வகையில் தமது பாடசாலைக்கும், இல்லத்துக்கும் பயணம் செய்ய வழிகோலுவதுடன், பெற்றோருக்கும் மனநிம்மதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.