சூப்பர் டீலக்ஸ் படத்தில் | தினகரன் வாரமஞ்சரி

சூப்பர் டீலக்ஸ் படத்தில்

விஜய் சேது பதிக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அதற்கான டீசர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

‘விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை ‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதியுடன் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வலம் வரவுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கின்ற னர். இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி இணைந்து கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட விஜய் சேதுபதியின் கேரக்டர் ஷில்பா என்று அறிவித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைர லானது. தற்போது, சமந்தா கேரக்டர் பெயர் அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வேம்பு என்றும் அதற்கான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 

Comments