நீர்கொழும்பு நவலோக்கவில் இ​ைரப்பை அழற்சியை குணப்படுத்தும் விசேட சிகிச்சை அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

நீர்கொழும்பு நவலோக்கவில் இ​ைரப்பை அழற்சியை குணப்படுத்தும் விசேட சிகிச்சை அறிமுகம்

கெஸ்ட்ரைட்டிஸ் (இரைப்பை அழற்சி) நோயை குணப்படுத்தக்கூடிய விசேட சிகிச்சை முறையொன்று நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே கெஸ்ட்ரைட்டிஸ் நோயினால் சிரமப்படுவோர் தொடர்ந்தும் இந்த நோயினால் அவதிப்பட வேண்டியதில்லை.

கெஸ்ட்ரைட்டிஸ் நோயாளிகள் அதனை குணமாக்கிக் கொள்வதற்காக மூன்று இலட்ச ரூபா வரையில் செலவு செய்து சத்திரசிகிச்சை செய்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இனிமேல் கெஸ்ட்ரைட்டிஸ் நோய்க்கு சத்திரசிகிச்சை இன்றி என்டஸ்கோப்பி மூலம் அதனை குணப்படுத்தும் வகையிலான புதிய சிகிச்சை முறையை நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் செய்துகொள்ள முடியும். அந்த சிகிச்சை முறைக்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான குறைந்தளவு பணமே செலவாகும். இந்த என்டஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகள் அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து செல்லமுடியும்.

இந்த சிகிச்சை முறை இலங்கையில் வேறு எந்த வைத்தியசாலையிலும் கிடைக்காது. இந்தமுறை இலங்கையில் முதல் தடவையாக நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு பெரும் வசதியாக உள்ளது.

ஜப்பானிய பேராசிரியர் தலைமையில் இந்த சிகிச்சைமுறை கடந்த 19 ஆம் திகதி நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைமுறை தொடர்பாக இலங்கையில் உள்ள 10 வைத்தியர்களுக்கு பிரயோக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அதன்பின் புதிய முறையின்படி சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும்.

சர்வதேச மட்டத்தினாலான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுத்தரும் நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையின் மூன்றாம் ஆண்டு நிறைவு அண்மையில் இடம்பெற்றது. இதனையிட்டு நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலை இரண்டு புதிய வைத்திய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மூட்டுவலி மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றை நிரந்தரமாக சுகமாக்குவதற்கு நூற்றுக்கு நூறு இயற்கை முறையிலான PRP சிகிச்சைமுறை தற்போது நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Comments