உணவகங்களில் கிடைக்கும் சுவையை இல்லங்களில் வழங்கும் | தினகரன் வாரமஞ்சரி

உணவகங்களில் கிடைக்கும் சுவையை இல்லங்களில் வழங்கும்

இலங்கையின் உணவுப்பிரியர்களுக்கு மேலும் சுவையை சேர்த்திடும் வகையில் Knorr, தனது புதிய சுவைக்கலவை தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. தமது இல்லங்களிலேயே, உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுவைகளுக்கு நிகரான தரமான உணவுகளை செளகரியமாக வீடுகளில் தயாரிக்கும் உணவுகளின் நலனுடன் தயாரித்துக்கொள்வதற்கு சுவையை சேர்க்கும் வகையில் Knorr Chefs Special Mixes அமைந்துள்ளன.

Knorr சமையற்கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் இந்த புதிய சுவைத்தெரிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவைக்கலவைத்தெரிவிலும்், பிரத்தியேகமான வாசனைத்திரவியங்கள் மூலப்பொருட்களாக சேர்க்கப்பட்டுள்ளதுடன், பசுமையான கறிமசாலாக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றினுௗடாக ஒப்பற்ற சுவையும் சேர்மானமும் வழங்கப்படுகிறது.

Knorrன் வர்த்தக நாமத்தூதுவரும், சமையற்கலை நிபுணருமான சத்துரிகா, கருத்துத்தெரிவிக்கையில், “ஒரு தாயாகவும், வீட்டில் சமையல் வேலைகளுக்கு பொறுப்பாக உள்ளவர் எனும் வகையிலும், குடும்ப அங்கத்தவர்களின் உணவுத்தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை உணர்ந்துள்ளதுடன், அவர்களுக்கு வீட்டில் தயாரித்து வழங்கும் உணவுகளின் சுவையை உயர் மட்டத்தில் பேணுவது பற்றி நான் அதிகளவு சிந்தித்துள்ளேன்.

புதிய Knorr Chefs Special Mixes தெரிவுகள் ஊடாக சுவை நிறைந்த உணவுகளை வீட்டிலிருந்தவாறே தயாரித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

இன்றைய வேலைப்பளு நிறைந்த உலகில், உணவக உணவுகளை நாடுவோர் அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களின் உணவுகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. அத்துடன், எப்போதும் அவற்றின் தூய்மை ஒரே மட்டத்தில் உயர்வாக பேணப்படுகின்றதா என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. வீடுகளில் தயாரித்துக்கொண்ட உணவுகளை அதிகளவு சுவையுடன் சேர்த்து உண்ண விரும்புவோருக்கு மிகவும் உகந்த தெரிவாக புதிய Knorr Chefs Special Mixes தெரிவுகள் அமைந்துள்ளன.

புதிய உணவு வகைகளை தயாரிப்பதற்கு ஊக்குவித்தல் என்பதற்கமைய, மேலதிக சுவையூட்டிகள், செயற்கை வர்ணங்கள், செயற்கை சேர்மானங்கள் அல்லது செயற்கை பதப்படுத்திகளை பயன்படுத்தாமல், புதிய Knorr Chefs Spice Mixes தெரிவுகளைக் கொண்டு உணவு வேளைகளை தயாரித்துக்கொள்ளலாம்.

மேலும், இலகுவில் பயன்படுத்தக்கூடிய வகையில் சஷே பக்கற்களில் முழுக்குடும்பத்துக்கும் செளகரியமான முறையில் சுவையான உணவை தயாரித்துக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. 

Comments