Inspiron 7000 மடிகணனியை அறிமுகம் செய்கிறது Dell | தினகரன் வாரமஞ்சரி

Inspiron 7000 மடிகணனியை அறிமுகம் செய்கிறது Dell

புதிய Inspiron 7000 உயர்ந்த அம்சங்கள், வியப்பூட்டும் வடிவமைப்பு மற்றும் நம்ப முடியாத செயல்திறன் அனுபவத்தை தருகின்றது

Inspiron 7000 ஆனது தற்போது அதிநவீன Intel 8th Generation Quad Core' processor உடன் இன்னும் வலிமைமிக்கதாக மாறியுள்ளது

அதிநவீன 8th Generation Intel Core processorகளைக் கொண்ட புதிய Inspiron 7000 notebook இனை அறிமுகம் செய்வது தொடர்பில் அறிவித்துள்ளது.

மொபைல் பல்-பணி (multi-tasker) அல்லது பல்-பயனர் வீடு (multi-user) தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய Inspiron 13 7000 notebook ஒரு சிறு அளவிலான முகத்திரையில், வியப்பூட்டும் காட்சிகள் மற்றும் வலிமையான செயல்திறனை கொண்டு வருகின்றது. டிஜிட்டல் முறையில் வரைதல், எழுத்தாக்கம் மற்றும் குறிப்பெடுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவும் எழுத்தாணியுடன் (active pen) குறுகிய ஓரம் மற்றும் FHD IPS தொடுகை முகத்திரையுடன் வாடிக்கையாளர்கள் தற்போது ஒரு முப்பரிமாண காட்சி அனுபவத்தை பெற்று மகிழ முடியும். மேலும், ஏனைய வலையமைப்புச் செயற்பாடுகளின் மத்தியில் streaming மற்றும் conferencing ஆகியவற்றிற்கு முன்னுரிமையளிக்கும் வகையில் Dell இனால் இணை வடிவமைக்கப்பட்டுள்ள SmartByte streaming தொழில்நுட்பத்தின் அனுகூலத்துடன் பயனர்கள் தங்குதடையின்றி திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், வீடியோ அரட்டையை முன்னெடுப்பதற்கும் இது இடமளிக்கின்றது. மேலும், வழமையான SSD க்கள் அல்லது விருப்பத்திற்கு அமைவாக PCIe NVMe SSD க்களுடன் நீடித்து உழைக்கும் பட்டரி மற்றும் அமைதியான செயல்திறனையும் வழங்குகின்றது.

தற்காலத்தில் மதிநுட்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய தனிப்பட்ட பாவனைக் கணனிகளை (PC) தெரிவு செய்யும் போது பலத்த எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளனர். கொள்வனவை மேற்கொள்வதற்கு முன்பதாக புத்தாக்கமான வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் ஆதரவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்கின்றனர், என்று Dell நிறுவனத்தின் தெற்காசிய அபிவிருத்தியடைந்து வருகின்ற சந்தைகள் குழுமத்தின் பொது முகாமையாளரான ஹர்ஜித் சிங் ரேஹி அவர்கள் குறிப்பிட்டார். எமது Dell Inspiron 7000 series notebook ஆனது அழகிய புதிய வடிவமைப்புடனும், Intel இன் 8th Generation Core Processor களின் பக்கத்துணையுடனும் வெளிவந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த செயல்திறனையும், முப்பரிமாண அனுபவங்களையும் வழங்குகின்றது. 

Comments