RENAULT க்கான வர்த்தக நாமத் தூதுவராக குமார் சங்கக்கார | தினகரன் வாரமஞ்சரி

RENAULT க்கான வர்த்தக நாமத் தூதுவராக குமார் சங்கக்கார

Associated Motorways Private Limited (AMW) இன் பங்குடமையுடன் கவர்ச்சிகரமான, புத்தாக்கம் மிக்க, கட்டுப்படியான விலையிலான Renault உற்பத்தியான Renault KWID ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வாகன மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கு, மகிழ்சியளிக்கும் நிகழ்வாக சர்வதேச கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை இலங்கையில் அதன் வர்த்தக நாமத் தூதுவராக நியமித்துள்ளது. ஆர்வம் மற்றும் புத்தாக்கத்திற்கு பெயர்பெற்ற இந்த வர்த்த நாமங்களின் இணைவானது உலகளாவிய பிரபலத்தைக் கொண்டிருப்பதோடு, வெற்றிகரமான வரலாற்றையும் கொண்டுள்ளது.

குமார் சங்கக்கார வாழ்க்கையில் பேரார்வம் எனும் ரெனோல்டின் அடிப்படை உறுதிமொழியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த இணைப்பானது குமார் சங்கக்கார மற்றும் ரெனோல்ட் என்பனவற்றின் பல்திறன் மற்றும் மரபு என்பனவற்றைப் பேண உதவுகின்றது. மக்களின் வாழ்வோடு ஒன்றிணையக்கூடிய வகையிலான, மக்கள் விரும்பககூடிய, கவர்ச்சிகரமான கார்களை வடிவமைப்பதன் மூலம், ரெனோல்ட் தான் ஆற்றும் கருமங்கள் யாவும் சிறந்தது என்பதை உறுதி செய்கின்றது.

குமார் சங்கக்காரவுடனான இணைவு குறித்துக் கருத்துக்கூறிய ரெனோல்ட் குழமம், இந்திய உப கண்ட செயற்பாடுகளுக்கான வதிவிட நிறைவேற்றதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சுமித் செளஹ்னி, இலங்கையில் மிகக்குறுகிய காலத்தில் ரெனோல்ட்டானது மிகத்துரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. Renault KWID க்கு வாடிக்கையாளர் வழங்கிய தனித்துவமான வரவேற்புக்கு நாங்கள் நன்றியூடையவர்களாயுள்ளோம். இலங்கையில் நீண்டகால வெற்றிகமான இன்னிங்ஸொன்றுக்கான சிறப்பான தேர்வாக இலங்கையில் எங்களது வர்த்தக நாமத்தூதுவராக குமார் சங்கக்காரவின் பெயரை அறிவிப்பதில் நான் பெருமகிழ்வடைவதாக குறிப்பிட்டார். 

Comments