Fast & Furious –நேஷன்ஸ் விளையாட்டு தினம் 2017 | தினகரன் வாரமஞ்சரி

Fast & Furious –நேஷன்ஸ் விளையாட்டு தினம் 2017

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி விளையாட்டுதினம் 2017 அண்மையில் ‘Fast & Furious’ எனும் தொனிப்பொருளில் அண்மையில் ஹவ்லொக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக புகழ்பெற்ற ரேசிங் விளையாட்டு வீரரான திலந்த மலாகமுவ பங்கேற்றிருந்தார்.

நேஷன்ஸ் விளையாட்டுதினம், வருடாந்தம் வங்கியினால் ஏற்பாடுசெய்யப்படுவதுடன், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தவாய்ப்பை வழங்குகிறது. அத்துடன், நிறுவனத்தினுள் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் உதவி, ஊழியர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிப்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது. மேர்கன்டைல் போட்டித்தொடர்களில் வங்கி போட்டியிட்டு பலவிருதுகளையும் வென்றுள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தற்போது அங்கம் வகிக்கும் வீரர்க ைதனது ஊழியர் குழுவில் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் மூலமாக இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 25 வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் செளகர்யம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு தன்வசம் கொண்டுள்ள பெருமளவானநி திசார் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கியியல் மற்றும் கொடுப்பனவு கட்டமைப்பான FriMi ஐ தன்வசம் கொண்டுள்ளது. நாடுமுழுவதும் வங்கி 93 கிளைகளைகொண்டுள்ளது. 

Comments