டிரம்பின் ஆசிய விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

டிரம்பின் ஆசிய விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரத்துக்கு வந்து 11 மாதங்கள்தான் ஆகின்றன. ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவுடனேயே அவருக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் மெல்லமெல்ல குறைந்தன. ஆனால் அவரது 11 மாத பதவிக்காலம் கொந்தளிப்பாகத்தான் இருந்தது. அவரது பேச்சும் விடுத்த அறிக்கைகளுமே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் கடந்தவாரம் ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட ஆசிய விஜயத்தின்போது என்ன நடந்ததோ தெரியவில்லை. டிரம்ப் மிகவும் பக்குவப்படுத்தப்பட்டவர் ஆகியிருக்கிறார்.

கடந்த ஐந்தாம் திகதி ஜனாதிபதி டிரம்ப் தனது ஆசிய விஜயத்தை ஆரம்பித்தார்.

5 முதல் 7 வரை ஜப்பான், 7 முதல் 8 வரை தென்கொரியா, 8 முதல் 10 வரை சீனா, 10 முதல் 12 வரை வியட்நாம், 12 முதல் 14 வரை பிலிப்பைன்ஸ் இதுதான் டிரம்பின் ஆசிய பயணப்பட்டியல்

ஆசியாவில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு தென் கொரியா அங்கு அமெரிக்க படைத்தளம் அமைக்கும் அளவுக்கு நெருக்கம். இதனால் தென்கொரியாவுக்கான டிரம்ப் விஜயம் முழுமையான அதிகாரபூர்வ விஜயமாக இருந்தது. தென்கொரிய சட்டசபையில் டிரம்ப் உரையாற்றினார். தென்கொரிய ஜனாதிபதி மூன்ஜே இலனுடன் சேர்ந்து அமெரிக்க தென்கொரிய இணைப்புப்படைத் தளமான ஹம்ரோஸூக்கும் சென்று தளத்தைப்பார்வையிட்டார். தென்கொரிய விஜயம் சுமுகமாக முடிவுற்றது.

அடுத்தது சீனா, சீனா அண்மைக் காலத்தில் ஒரு பொருளாதார வல்லரசாக மாறிவருகிறது. தென்கிழக்கு கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அண்டை நாடுகளிலும் தனது பிரசன்னத்தை விஸ்தரித்து வருகிறது. அமெரிக்காவுடன் எப்போதுமே போட்டி மனப்பான்மையுடன் தான் இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயம் எப்படி அமையப்போகிறது என்பதை முழு உலகமும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது.

முதலில் ஜப்பான், ஜப்பானிய பிரதமர் சின்ஸோ அபே ஜனாதிபதி டிரம்புடன் நெருங்கிப் பழகுபவர். வடகொரிய விவகாரத்தில் டிரம்பின் தொலைபேசி சகா என்று நியூயோர்க் பத்திரிகைகள் அபேயைக் குறிப்பிடுவதுண்டு ஏனெனில் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சில் பெரும்பாலும் அரைபடுவது வடகொரியாதான். பிரதமர் அபே சில காலத்திற்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றிந்தபோது டிரம்ப் அவரை கோல்ப் விளையாட புளோரிடாவுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

புளோரிடாவில் டிரம்ப் கோல்ப் விளையாட அழைத்துச் சென்றதற்குப் பதிலாக ஜப்பானில் கோல்ப் விளையாட பிரதமர் அபே டிரம்ப்பை அழைத்துச் சென்றிருந்தார். அதேநேரம் 1970 மற்றும் 80களில் வடகொரியா பலாத்காரமாகக் கொண்டு சென்ற ஜப்பானியர்களின் குடும்பங்களையும் டிரம்ப் சந்தித்தார்.

டிரம்பின் சீனா விஜயத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் சீன ஜனாதிபதி சி ஜிங் பிங் சீனாவின் அரசியலில் முழுமையாக கட்டுப்பாட்டை பெற்றிருந்தார். சீன கம்யூனிச கட்சியின் மாநாட்டில் அவருக்கு அந்த அதிகாரம் கிடைத்திருந்தது.

டிரம்புக்கு முன் பதவியியில் இருந்த பராக் ஒபாமா இரண்டுமுறை சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதல் விஜயத்தின்போது ஒபாமா நடத்திய ஊடக மாநாட்டில் ஊடக சுதந்திரம் பற்றிக் எழுப்பப்பட்ட கேள்வி சீன அதிகாரிகளுக்கு அதிருப்பத்தியை ஏற்படுத்தியிருந்தது. இரண்டாவது விஜயத்தின் போது காணாமல் போன விமானமொன்று ஏற்படுத்திய சர்ச்சை சீன அதிகாரிகளுக்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஒபாமாவின் இரு விஜயங்களின்போதும் தென்சீனக் கடலில் சீனாவின் விஸ்தரதிப்பு செயற்பாடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலேயே ஒபாமாவின் பயணச் செயற்பாடுகள் அமைந்திருந்ததைக் காணப்கூடியதாக இருந்தது. எனவே, இம்முறை என்னநடைபெறப் போகிறது என்ற கேள்வி உலக அரசியல் வட்டாரங்களில் தொக்கிநிற்கின்றது.

ஆனால் இவ்வாறான எதிர்பார்ப்புகளுக்கு மாறாக டிரம்பின் விஜயத்தின்போது அவரோ சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் கே தென்சீன கடல்பற்றி எதுவுமே பேசவில்லை என்பது ஆச்சரியமான விடயமாகும்.

2016 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது எமது நாட்டின் பொருளாதாரத்தை சீனா சுரண்டுகிறது இதனை நாம் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. உலக சரித்திரத்தில் இடம்பெறும் பெரிய களவு இதுவாகத்தான் இருக்கும். என்று சீனாவில் பொருளாதார விஸ்தரிப்புபற்றி ஆத்திரக்குரல் எழுப்பிய டிரம்ப் சீனாவில் வைத்துக்கூறியது இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகம் நீண்டகாலமாக அமெரிக்காவுக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. இந்த வர்த்தகத்தால் அமெரிக்காவுக்கு வருடாந்தம் 300 அமெரிக்க டொலர் நஷ்டம் வருகிறது. இதுவொரு பாக்கசார்பானதும். முறையற்றதுமாகும். ஆனால்் இதற்காக நாம் சீனாவைக் குற்றம் சொல்ல முடியாது. ஒருநாட்டின் மக்களுக்காக அந்த நாடு மற்றொருநாட்டின் அனுகூலங்களைப் பெற முனைவதும் தப்பாகாது. இதற்கு நாம் எமது (அமெரிக்க) நிருவாகத்தை குறைசொல்வேன். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்கு எமது நிருவாகமே காரணம் அதை நிருவாகமே சரிசெய்ய வேண்டுமென்று டிரம்ப் தனது பக்கத்துக்கெதிராகவே கோல்போட்டு சீன ஜனாதிபதியை மட்டுமன்றி முழு உலகத்தினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

சீன கம்யூனிஸ் கட்சியின் மையமான மக்கள் மண்டபத்தில் எட்டு நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய டிரம்ப் சீன ஜனாதிபதி நினைத்தால் மனது வைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்று கூறி தனது பேச்சை முடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் டிரம்பின் இந்த விஜயத்தின்போது 250 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட பொருளாதார உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டன.

சில வாரங்களுக்கு முன் வடகொரியாமீது வசைபாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆசிய விஜயத்தின் இறுதிக்கட்டமாக விஜட்நாமில்வைத்து வசைபாடலுக்கு முற்றிலும் மாற்றமாகப் பேசியிருந்தார்.

நாகரீகமான அனைத்து நாடுகளையும் இணைக்கும் இலக்குகளான ஆபத்தின்மையும் பாதுகாப்பும் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். வியட்நாமில் ஜனாதிபதி டிரம்ப் டிராங் -----------= குவாங்குடன் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டில் குழப்பம் வேண்டாம் ஸ்திரநிலை வேண்டும் யுத்தம் வேண்டாம் சமாதானம் வேண்டும் என்று கூறியிருந்தார்.

டிரம்பின் மேற்படி பக்குவப்பட்ட பேச்சின் காரணமாகவே வடகொரியா விடயத்தில் ஏற்பட்டிருந்த மூன்றாவது உலக யுத்த அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. 11 மாதங்களுக்கு முன்பும் அதிகாரத்திற்குவந்த ஆரம்பத்திலும் டிரம்பிடம் இருந்த கோபமும் கொந்தளிப்பும் குறைந்திக்கிறது.

கடந்த 25 வருடங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஆசியாவுக்கான நீண்ட பயணம் இதுவாகும்.

எவ்வாறெனினும் தனது ஆசிய விஜயத்தின் இறுதியில் இடம்பெற்ற கிழக்காசிய மாநாட்டில் டிரம்ப் பங்குபற்றவில்லை. மாநாடு ஆரம்பிக்க 2 மணி நேரம் தாமதமாகியதையடுத்து அதில் பங்குபற்றும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அரை மணிநேரம் முன்னதாகவே தனது Air Force 1 விமானத்தில் டிரம்ப் அமெரிக்கா பயணமானார். 

Comments