கொழும்பு 7 இல் Daraz.lk | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு 7 இல் Daraz.lk

தனது முதலாவது ஆண்டு பூர்த்தியை எட்டியுள்ள Daraz.lk அதனைக் கொண்டாடும் முகமாக Reckitt Benckiser நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அணியைச் சேர்ந்த ஜுட் மார்ட்டினோ மற்றும் Daraz இன் பிராந்தியப் பணிப்பாளரா சுமித் ஜசோரியா ஆகிய விருந்தினர்களுடன் தனது புதிய பண்டகசாலை மற்றும் பொருட்கள் சேகரிப்பு மையத்தை திறந்து வைத்துள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு செளகரியம் மற்றும் சிறந்தசேவையை வழங்கவேண்டும் என்ற முனைப்புடன் Daraz அணி வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் 6,000 சதுர அடிகொண்ட விசாலமான இடப்பரப்பில் புதிய பண்டகசாலையான 51 Daraz அமைந்துள்ளது.

தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்து ஒருவருட காலப்பகுதிக்குள் Daraz.lk அடையப்பெற்றுள்ள சீரான வளர்ச்சி மற்றும் வெற்றியைத் தொடர்ந்தும் பேணும் ஒரு முயற்சியாக இப் புதியபண்டகசாலை வசதி விஸ்தரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான நகர்ப்புறப் பிரதேசத்தில், 51,கிறெகரிவீதி, கொழும்பு 7 என்ற முகவரியில் அமைந்துள்ள பண்டகசாலையானது திங்கட்கிழமைமுதல் வெள்ளிக்கிழமைவரை மு.ப. 9.00 மணிமுதல் பி.ப 6.00 மணிவரை தொழிற்பாடுகளுக்காக திறந்திருப்பதுடன்,நேரடியாக வருகை தந்து அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்காகபொருட்கள் சேகரிப்புமையம் ஒன்றும் இங்கும் அமைந்துள்ளது. தமது வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இடைத்தொடர்புபடும் வாய்ப்பினையும் இது ஏற்படுத்தியுள்ளது.

“எமது முதலாவது ஆண்டு பூர்த்தியை எட்டியுள்ள இத்தருணத்தில் நாம் கற்பனைசெய்து பார்த்திராத அளவிற்கு எமக்கு அதிகமான வெற்றியை ஈட்டித்தந்துள்ளதுடன், இந்த ஒருவருடகாலத்தில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களுக்கான கோரல் வீதமானது வெறுமனே இரட்டிப்பாகஅன்றி,மும்மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே எப்போதும் தனித்துவமாகத் திகழும் Daraz.lk தனிவழியில் இதனைக் கொண்டாடுவதற்கு நாம் தீர்மானித்தோம்.

எமது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என எமதுவெற்றிக்கு உறுதுணை புரிந்துள்ள அனைவருக்கும் கைம்மாறு செய்யநாம் விரும்பியதுடன்,விரைவாக விநியோகங்களை மேற்கொண்டுவாடிக்கையாளர்களுக்குசெளகரியம் அளித்தும்,விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற கையிருப்பு தொகுதிகளை வைத்துப் பேணுவதற்கு அதிக இட வசதியையும் எமக்கு அளித்தும்.

எங்கள் அனைவரினதும் வாழ்விலும் நற்பலனளிக்கும் மற்றுமொருசேவையைநாம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம் ”என்று Daraz.lk இன் இலங்கைக்கான முகாமையாளரான பார்ட் வான் டைக் குறிப்பிட்டார். 

Comments