இந்திய சரக்குக் கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து | தினகரன் வாரமஞ்சரி

இந்திய சரக்குக் கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து

கே.அசோக்குமார்

நடுக்கடலில் மூழ்கிய இந்திய சரக்குக் கப்பலிலிருந்து ஏழு இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியிலிருந்து மாலை தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல் காலியிலிருந்து 68 கடல்மைல் தொ​ைலவில் விபத்தில் சிக்கி மூழ்கியுள்ளது. இந் நிலையில் உயிருக்காக போராடி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு பேருமே இலங்கை கடற்டையினரால் காப்பாற்றப்பட்டதாக  கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார். இந்தியாவுக்குச் சொந்தமான (‘Maria Iurudaya’ Merchant Sailing Vessel) சிறிய ரக சரக்குக்கப்பலிருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியிலிருந்து மாலை தீவுக்கு சரக்குளை ஏற்றிச்செல்லும் மேற்படி கப்பல், குறிப்பிட்ட நாளில் மலைத்தீவை வந்தடைய வேண்டும்.எனினும் கப்பல் கரைசேர வேண்டிய தினம் பிந்தியிருந்ததுடன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாக மாலைதீவு அதிகாரிகள் இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளனர்.

காலி கடற்பரப்புக்கப்பால் இக் கப்பல் பயணிப்பதால் சரக்குக் கப்பல் தொடர்பாக கவனம் செலுத்துமாறு மாலைதீவு, சில தினங்களுக்கு முன் இலங்கை கடற்படையிடம்கேட்டிருந்த்து.

இதற்கமைய இலங்கை கடற்படையினர் இவ் வழியாகச்செல்லும் சகல கப்பல்கள் மற்றும் ஆழ் கடல் மீன்பிடி படகுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு இவ் வழியாகச் சென்ற “Sahan Putha’. ‘சஹன் புத்தா’ என்ற ட்ரோலர் படகு, கப்பல் மாலுமிகள் மிதவைகளின் உதவியுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக கடற்படைக்கு தகவல் தெரித்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட இலங்கை கடற்படையினர், காலியிலிருந்து P490 ரக அதிவேக டோரா படகொன்றை ஸ்தலத்துக்கு அனுப்பிவைத்தனர், காலியிலிருந்து சுமார் 65 கடல் மைல் தொலைவில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 07 பேரும் நேற்று அதிகாலை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

07 இந்தியர்களும் நேற்று அதிகாலை சுமார் 6.35 மணியளவில் காலி கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் 07 இந்தியர்களையும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Comments