வடக்கில் -ஆட்சித்திறன் மீட்சிக்கான | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் -ஆட்சித்திறன் மீட்சிக்கான

 கருணாகரன்  

வடக்கு மாகாண சபைக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் “வாய்ப்பாக அல்லது சவாலாக” ஒரு செயற்பாட்டமைப்பின் உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த அமைப்பின் உருவாக்க முயற்சிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து, தற்போது அது முழு வடிவத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் துறைசார் செயற்பாட்டாளுமைகளும் அறிஞர்களும் ஆற்றலாளர்களும் செயற்பாட்டாளர்களும் எனப் பல தரப்பினரும் இணைந்திருக்கிறார்கள். இதனால், இது ஒரு வினைத்திறனுள்ள அமைப்பாகச் செயற்படக்கூடிய ஏதுநிலைகள் காணப்படுகின்றன. “ஆட்சித்திறன் மீட்சிக்கான அமைப்பு” (Peoples’ Council for Revitalizing Governing Abilities (PCRGA) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், வினைத்திறனையே இது குறிக்கோளாக கொண்டிருப்பதாக உணர்த்துகிறது.

இது தொடர்பாக மேலும் அறிய இதனுடன் தொடர்புள்ளவர்களிடம் கேட்டேன். “இதென்ன மாகாணசபைக்கும் விக்கினேஸ்வரனுக்கும் வாய்ப்பாக அல்லது சவாலாக செயற்படும் அமைப்பு என்று சொல்லப்படுகிறதே. இதெப்படிச் சாத்தியமாகும்? “வாய்ப்பாக இருக்கும்” என்றால், அது ஆதரவாகச் செயற்படுவதாகும். “சவாலாக இருக்கும்” மாகாண சபைக்கும் முதலமைச்சருக்கும் எதிராகச் செயற்படுவது என்றல்லவா பொருள்படும். இதில் எது உண்மை?” என.

“இந்த அமைப்பு, மாகாண சபைக்கோ முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கோ எதிரானதல்ல. வேண்டுமென்றால், அவர்கள் இந்த அமைப்பின் வழிகாட்டலையும் ஆலோசனை, அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆதரவையும் கூடப் பெற்றுக்கொள்ளலாம். அதை வழங்குவதற்கு இது தயாராகவே உள்ளது. இந்த அமைப்பானது, மாகாண சபையை குறை சொல்வதையோ விமர்சிப்பதையோ நோக்கமாகக் கொள்ளவில்லை. உள் நோக்கத்தோடு செயற்படுவதற்கு இது ஒரு அரசியல் அமைப்போ, கட்சியோ அல்ல. எந்த வகையிலும் அரசியல் சாராத ஒரு அமைப்பு. இதில் செயற்படுகின்றவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் ஈடுபாடுகளும் செயற்பாட்டு முறைமைகளும் இருந்தால், அவர்கள் அதை எந்தக் காரணம் கொண்டும் இந்த அமைப்பில் பிரதிபலிக்க முடியாது.

“இந்த அமைப்பை யாரும் தங்களுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கும் நலன்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இது முழுமையாகவே மக்களின் நலன் நோக்கிய ஒரு பொது அமைப்பு. திறந்த அமைப்பு. மக்களின் மீது கரிசனையுள்ள, எவரும் நேர்மையாகச் செயற்படுவதற்காக இந்த அமைப்புடன் சேர்ந்து கொள்ளலாம். மாகாணசபையின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அதற்கான சட்டவாக்கங்களையும் வினைத்திறனுள்ள நேர்மையான நிர்வாக முறைமைகளையும் மையப்படுத்தியே இந்த அமைப்புச் செயற்படும். ஆகவே இதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வந்தால் இது மாகாணசபைக்கும் முதலமைச்சருக்கும் வாய்ப்பானதாக இருக்கும். இதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முற்பட்டால், அது சம்பந்தப்பட்டவர்களுக்குச் சவாலாகவே அமையும். ஆகவேதான் இது வாய்ப்பாக அல்லது சவாலாக அமையும் என்கிறோம்” என்றனர்.

“மாகாண சபையினருடன் இந்த அமைப்புக்குறித்துப் பேசப்பட்டதா?” என்று கேட்டேன்.

“உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக யாரோடும் பேசவில்லை. ஆனால், அவர்கள் இதைப் பற்றி அறிந்திருக்கக்கூடும்” என்றனர்.

மாகாணசபையின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் உருவாகிய குறைபாடுகளை அவதானித்ததன் விளைவே இந்த அமைப்பின் உருவாக்கம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மாகாண சபையின் நான்காண்டு கால ஆட்சியின் திறனின்மைகளையிட்டு மக்கள் எரிச்சலடைந்திருக்கிறார்கள் என்பதால், அதைச் சீராக்கும் முயற்சியாக இருக்கலாம். மாகாணசபையின் வினைத்திறன் போதையைப்பற்றிப் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அண்மையில் அரசியல் பத்தியாளர் யதீந்திரா முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் செய்திருந்த நேர்காணலில்கூட இதைப்பற்றிய கேள்வியை எழுப்பியிருந்தார். ஊடகங்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளிலும் விக்கினேஸ்வரனின் நிர்வாகம் உள் – வெளி நெருக்கடிகளுக்குள்ளே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உள்நெருக்கடியினால் இரண்டு அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அது ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவோடு நிறுத்தப்பட்டது. இதைவிட தொடர்ந்தும் இழுபறிகளும் முரண்பாடுகளும் ஒத்துழையாமைகளும். கூடித் திட்டமிடுவதோ, கூடிச் செயற்படுவதோ இல்லாமற் போய்விட்டது.

இதற்கெல்லாம் காரணம் அவருடைய கட்சிக்குள்ளே – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளே - வளர்ந்திருக்கும் அதிகாரப்போட்டியும் முரண்பாடுகளுமே.

மறுபக்கத்தில் வெளி நெருக்கடியாக, அரசாங்கத்துடன் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் முரண்களும் முதலமைச்சரோடும் வடமாகாணசபையோடும் அரசாங்கத்துக்கிருக்கும் அதிருப்திகளும். இதெல்லாம் மாகாணசபையைப் பின்னிழுக்கும் பாரங்கள்.

இந்த நிலையில் மாகாண நிர்வாகம் வினைத்திறனோடு இயங்க முடியாது. ஒரு அரசியல் நிர்வாகம் செயற்படுவதற்கு உள், வெளி ஆதரவு என்ற வலுவான அடித்தளம் தேவை. அதை வடக்குமாகாணசபை இழந்து நிற்கிறது. இதற்குக் காரணம், மாகாண நிர்வாகத்தை வினைத்திறனோடு இயக்குவதற்குத் தேவையான அரசியல் முதிர்ச்சியும் சமூகச் சிந்தனையும் மக்கள் மீதான அக்கறையும் அர்ப்பணிப்பான உழைப்பும் செயலாற்றலும் ஆளுமையும் கூடிச் செயற்படும் மனப்பாங்கும் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர்களிடத்திலும் அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்களிடத்திலும் இல்லை என்பதே.

இதனால், வடக்கு மாகாணசபை தோல்வியானதொரு அமைப்பாக, மக்களுடைய நம்பிக்கைக்கு மாறான அமைப்பாகியுள்ளது.

வடக்கு மாகாணசபைக்குள்ள வளங்கள், அதிகாரம், அரசியற் பலம், வெளிநாடுகளின் உதவி, அவற்றின் ஆதரவு, புலம்பெயர் மக்களுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் என கிடைத்திருப்பவை இலங்கையின் ஏனைய மாகாணசபைகளை விட அதிகமானவை. வேறுபட்டவை. ஏனைய மாகாண முதலமைச்சர்களை விட வடக்குக் கிழக்கு முதலமைச்சர்களுக்கான அடையாளமும் மதிப்பும் அதிகப்படியானது. அதிலும் வடக்கு முதல்வருக்கான மதிப்பு இன்னும் உச்சமானது.

அப்படிக் கிடைத்துள்ளவற்றைப் பயன்படுத்திப் பல விடயங்களைச் செய்திருக்க முடியும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் இந்தப் பணியை முன்னிறுத்திச் செய்திருக்க வேண்டிய கடப்பாடு வடக்கு மாகாணசபைக்குள்ளது. ஆனால், இதை அது முறைப்படி செய்யவில்லை. இதற்கான சட்டவாக்கங்களை அது உருவாக்கவில்லை. பொதுவாக மாகாணசபையை வலுப்படுத்தக்கூடிய அடிப்படைகளை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

பதிலாக அதனுடைய கவனமெல்லாம் தேர்தல் அரசியலுக்கான சொல்லாடல்களை உற்பத்தி செய்வதிலும் அதற்குப் பொருத்தமான பிரேரணைகளை நிறைவேற்றுவதிலுமே இருக்கிறது. கடந்தகாலத்தில் மாகாணசபை நிறைவேற்றிய பிரேரணைகளில் 70 வீதமானவை காலப் பெறுமானமற்றவை.

இதனால், ஆட்சித்திறனை இழந்த அமைப்பாக மாகாணசபை நிர்வாகம் தளம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலேயே ஆட்சித்திறனை மீட்டெடுத்து மக்களுக்காக இயங்கும் ஓரமைப்பாக இந்தப் புதிய அமைப்பு உருவாகியுள்ளது எனக் கொள்ள முடிகிறது.

வடக்கில் ஆட்சித்திறனை மீட்சிப்படுத்தி, மக்கள் மயப்பட்டதொரு ஆட்சிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது இதன் நோக்கமாக இருக்கலாம். ஆகவே வினைத்திறனே இதனுடைய உயிர். செயற்பாடே இதனுடைய அடையாளம். இதுதான் மாகாணசபைக்கும் விக்கினேஸ்வரனுக்கும் சவாலாக இருக்கப்போகிறது போலும். செயற்பாட்டுத்திறனும் செயற்பாட்டுத்திறனின்மையும் மோதும் களமாக இது மாறலாம். ஆனால், இதை விக்கினேஸ்வரன் கையாள்வதை – எதிர்கொள்வதைப் பொறுத்தே அடுத்த கட்டமாக இது எப்படி (17 ஆம் பக்கம் பார்க்க)

 

Comments