17 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் போட்டி | தினகரன் வாரமஞ்சரி

17 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் போட்டி

பரீத் ஏ,றகுமான்

17 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் போட்டி இன்று 8ம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு குதிரை பந்தய திடல் மைதானத்தில் ஆரம்பமாகும்.

47 நாடுகளில் இருந்து 8000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாவும் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

முழு மரதன் போட்டி மற்றும் அரை மரதன் போட்டி என்பன பேஸ் லைன் வீதி வழியாக நீர்கொழும்பை சென்றடையும்.அரை மரதன் போட்டி ஹேகித்தவில் நிறைவடையும்.முழு மரதன் போட்டி தலஹேனவில் முடிவடையும்.

இதேவேளை 5 மற்றும் 10 கிலோமீற்றர் வரை களியாட்ட ஓட்டப்போட்டியும் கொழும்பை அண்டிய பகுதியில் இடம்பெறவுள்ளது.

முழு மரதன் 18 வயதுக்கு மேல் ஆண்/பெண் முழு மரதன் 50 க்கு மேற்பட்ட ஆண்/பெண் (சிரேஷ்ட)

அரை மரதன் ஆண்/பெண் மற்றும் (சிரேஷ்ட)

10 கிலோமீற்றர் ஆண்/பெண் 15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 கிலோமீற்றர் ஆண்/பெண் மற்றும் பாடசாலை மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 7 ம் திகதி 9 மணியில் இருந்து 4 மணி வரை தங்களது மருத்துவ சான்றிதழ்களை மருத்துவ குழுவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கொழும்பு குதிரை பந்தய திடல் மைதானத்தில் 12 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வு இடம்பெறும்.

ரூபவாஹினி கூட்டுத்தாபன ஐ அலை வரிசையில் காலை 5.45 மணி முதல் ஒளிபரப்பு செய்யப்படும். 

Comments