பிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் தொடர்ந்தும் முன்னணியில் | தினகரன் வாரமஞ்சரி

பிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் தொடர்ந்தும் முன்னணியில்

வருடா வருடம் நடைபெறும் பிரபலமான மோட்டார் வாகனப் போட்டியான போமியுலா- 1 மோட்டார் வாகன உலக சம்பியன் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று ஜப்பான் சுசூகா நகரில் நடைபெறுகின்றது.

இது இம்முறை உலக சம்பியன் தொடரின் 16 வது போட்டியாகும்.

போமியுலா- 1 வருடா வருடம் சர்வதேச மோட்டார் வாகன சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரபல்யமான போட்டித் தொடராகும்.

போமியுலா- 1 2017 உலக சம்பியன் தொடரில் மொத்தமாக 20 போட்டிகள் நடைபெறுகின்றன. வழமை போல் இம்முறையும் வாகனம் ஓட்டுனர் மற்றும் அணி என இரு சம்பியன் கிண்ணத்துக்காக இப்போட்டிகள் நடைபெறுகின்றது.

கடைசியாகக் கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற 15வது சுற்றில் முன்னணி வீரர்களை பின்தள்ளிவிட்டு நெதர்லாந்து வீரர் மேக்ஸ்வெல்ட் டப்பேன் (ரெட்புல் அணி) 1 மணி 20 நிதிடம் 1 விநாடிகளில் ஓடி முடித்து முதலிடத்தைப் பெற்றார். இவ்வருடம் முடிவுற்ற 15 சுற்றுகளிலும் இவர் முதலிடம் பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும் போமியுலா- 1 வரலாற்றில் இவர் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும் கடந்த 2016ம் ஆண்டு தொடரில் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியொன்றிலும் இவர் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இச்சுற்றில் இவ்வருடம் முதலிடத்திலுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த லுவிஸ் ஹெமில்டன் இரண்டாவது இடத்தைப் பெற்று தனது புள்ளிக்குவிப்புக்கு மேலும் 18 புள்ளிகளைச் சேர்த்துக் கொண்’டார். மலேசியாவில் நடைபெற்ற சுற்றில் ஹெமில்டனுக்கும் மேஸ்வேல்ட் டப்பேனுக்கும் கடும் போட்டி நிலவியது. போட்டிக்கு முன் நடைபெறும் (போல் நிலையை அடைதல்), போமியுலா- 1 மோட்டார் போட்டியில் கலந்துகொள்வதற்கான தனது நிலையை உறுதி செய்யும் தெரிவுப்போட்டியிலும் ஹெமில்டன் பின்னடைவையே சந்தித்தார்.

இப்போட்டித் தொடர் முழுவதும் ​ஹெமில்டனுக்கு கடும் போட்டியாளராக கருதப்படும் ஜேர்மனியின் செபஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சுற்றில் 4வது இடத்துக்குத் தளள்ளப்பட்டார்.

இத்தொடரில் சென்ற 2016ம் ஆண்டு சம்பியனான ஜேர்மன் நாட்டின் நிகோ ரொஸ்பரின் இம்முறை பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற 15 சுற்றுப் போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் லுவிஸ் ஹெமில்டன் பெற்றுள்ள புள்ளிகள் 281. 32 வயதுடைய இவர் மெர்ஸிடிஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2008, 14, 15ம் ஆண்டுகளில் போமியுலா- 1 சம்பியனாகத் தெரிவானார். இது வரை இவர் இச்சுற்றில் சீனா, ஸ்பெயின், கனடா, பிரிட்டன், பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர் ஆகிய 7 நாடுகளில் நடைபெற்ற சுற்றுகளில் முதலிடங்களைப் பெற்றுள்ளார். மேலும் இவர் கடைசியாக மலேசியாவில் நடைபெற்ற சுற்றுக்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக முதலிடம்பெற்று அதுவரை முதலிடத்திலிருந்த வெட்டொலை புள்ளிப்பட்டியலில் முந்திச் சென்றுள்ளார். இவர் இத் தொடரில் இருமுறை 2வது இடங்களைப் பெற்றுள்ளார்.

இம்முறை இதுவரை இரண்டாவது இடத்திலுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்தியன் வெடோல் 248 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் இத்தாலி பெராரி அணியைச் சேர்ந்தவர். 30 வயதான இவர் இதுவரை 2010, 11, 12, 13 ஆம் ஆண்டுகளில் இத் தொடரில் சம்பியனாகத் தெரிவாகியுள்ளார். ஹமில்டனுக்கு சிறந்த போட்டியாளராக கருதப்படும் இவர் 12 சுற்றுக்களின் முடிவு வரை முதலிடத்திலேயே இருந்தார். ஆனால் கடைசியாக நடைபெற்ற நான்கு சுற்றுகளில் இவர் பின்னடைவைச் சந்தித்ததால் புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற சுற்றில் இவர் வெளியேறியிருந்ததும் புள்ளிபட்டியலில் பின்னடைவுக்கு ஒரு காரணமாகும். இத்தொடரரில் இவர் இதுவரை 4 முதலிடங்களையும் 5 இரண்டாம் இடங்களையும் பெற்றுள்ளார்.

பின்லாந்தின் 28 வயதான வெல்டெரி போடாஸ் 222 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திலுள்ளார். இவர் இத் தொடரில் ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடத்தை பெற்றார். இவரும் மெர்ஸிடிஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இரு முறை போமியுலா- 1 சம்பியனாகத் தெரிவாகியுள்ளார்.

போமியுலா- 1 2017ம் ஆண்டு சம்பியன் சுற்றில் இன்னும் 5 சுற்றுக்கள் மீதமிருக்கும் நிலையில் பிரித்தானியாவைச் சேர்ந்த லுவிஸ் ஹெமில்டன் முன்னிலையில் உள்ளார். ஆனால் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டின் வெட்டோல் இவருக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர் 25 புள்ளிகளைப் பெறுவார்.

2ம் இடம் 18 புள்ளிகள, 3ம் இடம் 16 புள்ளிகள், 4ம் இடம் 12 புள்ளிகள், 5ம் இடம் 10 புள்ளிகள், 6ம் இடம் 8 புள்ளிகள், 7ம் இடம் 6 புள்ளிகள், 8ம் இடம் 4 புள்ளிகள் வீதம் வழங்கப்படுகின்றன.

இதுவரை இச்சுற்றில் முதலிரு இடங்களைப் பெற்ற வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் பெற்ற இடங்களும் புள்ளிகளும் வருமாறு-,

இதுவரை நடைபெற்ற சுற்றில் வெற்றி பெற்றோர்

1. அவுஸ்திரேலரலியா-

செபஸ்டியன் வெடேல்

2. சீனா- லுவிஸ் ஹெமி்ல்டன்

3. பஹ்ரேன்- வெடேல்

4. ரஷ்யா- வெல்டேரி போடாஸ்

5. ஸ்பெயின்- ஹெமில்டன்

6. மொனாகோ – வெடேல்

7. கனடா- ஹெமில்டன்

8. அஸர்பைஜான்- டேனியல்

ரிகியார்டோ

9. ஆஸ்ரியா- போடாஸ்

10. இங்கிலாந்து- ஹெமில்டன்

11. ஹங்கேரி- வெடேல்

12 பெல்ஜியம்- ஹெமில்டன்

13. இத்தாலி- ஹெமில்டன்

14. சிங்கப்பூர்- ஹெமில்டன்

15. மலேசியா- மேக்ஸ் வெஸ்டபென்

இனி நடக்கவுள்ள போட்டிகள்

16. ஜப்பான்- அக்டோபர்- 8 (இன்று)

17. அமெரிக்கா- அக்டோபர் 22

18. மெக்ஸிகோ- அக்டோபர் 29

19. பிரேஸில்- நவம்பர் 12

20. ஐக்கிய அரபு இராச்சியம் (அபுதாபி) - நவம்பர் 26

எம்.எஸ்.எம். ஹில்மி 

Comments