தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை ஏ- அணி மேற்கிந்தியா பயணம் | தினகரன் வாரமஞ்சரி

தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை ஏ- அணி மேற்கிந்தியா பயணம்

இலங்கை ஏ அணி மூன்று உத்தியோகப் பற்றற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கு கொள்ள தனஞ்சய டி சில்வா தலைமையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகியுள்ளது.

7 துடுப்பாட்ட வீரர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 சகலதுறை வீரர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய இலங்கை அணி எதிர்வரும் 11ம் திகதி முதல் உத்தியோகப்பற்ற டெஸ்ட் போட்டியில் டௌவ்னி மைதனத்தில் மேற்கி்ந்தியத் தீவுகளுடன் மோதுகின்றது.

தற்போது பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷடீர சமரவிக்ரம மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோரும் இலங்கை ஏ அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 1ம் திகதி சபீனா பாக் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியுடன் ஆரம்பமாகின்றது. 

 

 

Comments