Acer Intelன் 8ஆம் தலைமுறை CPU அடிப்படையிலான நோட் புக்குகள் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

Acer Intelன் 8ஆம் தலைமுறை CPU அடிப்படையிலான நோட் புக்குகள் அறிமுகம்

Acer தனது அடுத்த தலைமுறைக்கான புதிய உற்பத்தித் தொடர்களாக, Swift, Spin மற்றும் Switch மாதிரிகளை மிகமெல்லிய, திருப்பக்கூடிய, கழற்றக்கூடிய மற்றும் Windows 10ம் உள்ளடங்கலாக விரிவாக்கியுள்ளது.

மேலும் பாதுகாப்பான உயிர்புள்ளியியல் (Biometric) தொழில்நுட்பம், வின்டோஸ் hello செயற்திறன், நட்புரீதியான பொழுதுபோக்கு மற்றும் தொழில் ரீதியான உற்பத்தித் திறனுடன் கூடிய மிகவும் பலம்பொருந்திய 8வது தலைமுறையின் Intel உடன் கூடியநோட்புக் கணனி கடந்த 14ம் திகதி கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயற்திறன் மற்றும் இலாவகத் தன்மை தவிர இந்நோட்புக் கணனியின் தன்மையும் வடிவமைப்பும் புதிய உற்சாகமான தன்மையொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன் அதன் செயற்பாட்டில் பூரண சமநிலைத் தன்மை காணப்படுகிறது.

E5 மாதிரியானது 14மற்றும் 15.6என்ற வகையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதுடன் இப்போதைக்கு 8ம் தலை முறையின் Intel Core i5 மற்றும் Corei7 CPUக்களைக் கொண்டது.

பல்வேறு வர்ணங்களைக் கொண்டுள்ளதுடன் NVIDIA Gjpa MX தொடரின் Graphic Card, சிறப்பான வடிவத்துடனான கவசம், memory compartment door, Blue light shield தொழில்நுட்பம், Dolby premium audio மற்றும் Skype சான்று போன்ற விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Swift 3, 17.95 மி.மீற்றர், 1.6 கிலோ எடை, மெல்லிய எளிமையான வடிவமைப்புடன் கூடிய அழகிய தோற்றமும் கொண்ட அலுமினியக் கவசத்தைக் கொண்டது. Intel மற்றும் புதிய nVidia இடையே உள்ள மாற்றுவழிகளுடன் புதிய 8ம் தலைமுறையின் Intel இதில் உள்ளடங்கியுள்ளது.

10 மணித்தியாலங்கள் வரையான பற்றரியின் ஆயுட்காலம் அதனைப் பயன்படுத்துவோருக்கு ஒரு முழு நாளினதும் அதற்குப்பாலும் வேலைகளைச் செய்ய உதவுவது மிகமுக்கிய விடயமாகும்.

Spin5 தொழில் வல்லுனர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. Spin 5 தொழில் வல்லுனர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இச்சாதனத்திலுள்ள பல்வேறான பரிவர்த்தனை வடிவங்களை பாவனையாளர்கள் laptop, tablet, display and tent முறைகளில் மிக இலகுவாக தயாரித்துக் கொள்ளலாம். Spin 5 ஆனது 8ம் தலைமுறையின் Intel Core processor அதிகபட்ச DDR4 16GB RAM, 13 மணித்தியால பற்றரி ஆயுட்காலம், NVIDIA GeForce graphic மாற்றீடு ஊடாக செயற்படும்.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.